Wednesday, May 26, 2010

இரங்கல் - விமான விபத்து...


விமான தாயே!

தன் சொந்தங்களை கண்டு
இருவரின் சந்தோஷத்தை பெருக்கிடவும்
தம்முள் ஆறுதலை ஒருவருக்கொருவர்
பரிமாறி சோகங்களை  குறைத்திடவும்

எத்தனையோ எண்ணங்களை கனவாக
மனதிற்குள் சுமந்து நினைவில்
வானில் பறந்தார்கள் கண்மூடி
தாய் போல் உன்னைநம்பி...

தன் வயிற்றுக்குள் சுமக்கும்
கருவினை போல அவர்களை
உன்னில் சுமந்து உண்மையில்
ஆகாயத்தில் தாங்கி சென்றாயே...

கனவுகள் நினைவாக
மண்ணுலகத்தில் கால்கள்
படும்முன்னே கருவினை
விண்ணுலகத்திற்கு அளி(ழி)த்தாயே...

வெட்டவெளியில் எரியும் தனலில்
சுட்டும்விரலை நொடி தருணம்
காட்டவே சுட்டுவிடும் உணர்வினிலே
துடிதுடித்து போகும் என்இதயம்...

அடைக்கப்பட்ட உன்னின் அறையினில்
உடல்முழுவதும் நிமிடங்கள் எரிந்து
தீயில் கருகிபோன உயிர்களை
நினைத்து பதைந்துபோனது என்னுடலும்...

மழை நின்றபின் இலையில்
சொரியும் கண்ணீராய் இல்லாது
மலையில் இருந்து பொங்கும்
அருவியென கண்ணில் வழிகின்றது

காதலியாய் உன்னை நினைத்து
வாழ்ந்த காதலன் விமானி
உன்னை கைவிட்டானோ? - இல்லை
பிறந்த வீடாய் உன்னை
வரவேற்கும் விமானதளம் தான்
அடைக்கலம் தர மறுத்ததோ? - இல்லை
வேறுக்காரணம் உன்னில் புதைந்தோ?




உன் மனமென்னும் கறுப்புபெட்டியை
இனி ஆராய்ந்து பார்த்து
நீ செய்வித்து கொண்டது
தற்கொலையா? - இல்லை
உனக்கு செய்விக்கப்பட்டது
கொலையா? என்று
தெரிந்து என்ன பயனோ?
பிரிந்த உயிர்கள் வரபோவதில்லையே?

உயிர் போனால் திரும்பாது
என்று அறிந்தவர்கள் நாங்கள்...
ஆனால்...
எரிந்த போன உடலாவது
கிடைக்காதா என்று ஏங்கும்
உயிர்களுக்கு என் ஆறுதலும்...
இறந்த ஜீவன்களின் ஆத்மா
சாந்தியடைய மனமான வேண்டுதலும்...

6 comments:

கமலேஷ் said...

மனதை மிகவும் கஷ்டப்படுத்தும் ஒரு நிகழ்வு...வழியான கவிதை...

Bharthi Raja said...

ITHAYAM KANAKIRATHU...VAARTHAIKAL ILLAI...kanneerai thodaithukondu...
Bharthi

Ramesh said...

Manathai piliyum varigal

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

உங்களின் வரிகளும் இரங்கலாய் இறைவனை அடைந்து அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டட்டும்..

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாரதி,

உன்னின் சோகத்தையும் இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரமேஷ்,
தங்களின் வரிகளுக்கு என் நன்றிகள்...