Friday, August 13, 2010

நடைபயணமாய்!!!


அன்றாட வாழ்வில்
பலநேரங்களில் பேருந்தில்
பயணிப்பதையும் தவிர்கின்றேன்!!!
நீங்காத உன்நினைவும்
நீண்டாயுள் பெறமனதுக்குள் 
சு(மந்)வைத்துக்கொண்டே பயணிக்கின்றேன்...

8 comments:

அண்ணாமலை..!! said...

வாசன்..கவிதை மிக நன்றாக உள்ளது.
எண்ணங்களை சற்றே மாற்று வடிவில்
கட்டுரைகளாகவும் படைக்கும் எண்ணம்
உள்ளதா?
உங்களுக்கு சிறப்பாக வரும் என நினைக்கிறேன்!
சுதந்திர தின வாழ்த்துகள்!!!!!
___/\___

கமலேஷ் said...

ம்ம்..நல்லா இருக்கு நண்பா....
சுதந்திர தின வாழ்த்துக்கள்...

Aathira mullai said...

கவிதை அருமை...பேருந்துப் பயணத்தையும் தவிர்த்து நடையின் சுவையில்.. அருமையான நினைவுகள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

எனக்கு மிக்க மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பின்னூட்டத்தை படிப்பதில்...

நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் உண்டு...

அது கவிதையா, கதையா, கட்டுரையா என்று தெரியாது...

நீங்க சொல்லிடீங்க தைரியமா எழுத முயற்சி பண்ணவேண்டியது தான்...

நீங்க இருக்க எனக்கென்ன பயம்...

தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....


மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா...

தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

மிக்க நன்றி...

பேருந்தில் அமர்ந்தால் சில மணிதுளிகள் தான் நினைக்க முடியும்...

நடையின் பயணத்தில் நீண்ட நேரம் சிந்தித்துக்கொண்டே... நினைவுகளை மனதிற்கு அசைபோட்டுக்கொண்டே...

அண்ணாமலை..!! said...

ஆம் நண்பரே! ஒரு நீண்ட பயணத்தில் கவிதைகள் மட்டுமே தொடர்வது சற்றே களைப்படையச் செய்யும் என்பது உண்மை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

இயற்கை என்னும் கவிதை சோலையில் நடைபயிலும் நேரம் என்றும் களைப்பு வராது என்பது எந்தன் எண்ணம்...

ஆனால்...

தாங்கள் அன்பாக உயர்வாக கூறும் கருத்தினை போல் சோலையில் விலங்குகளையும் பறவைகளையும் மற்ற சில காட்சிகளையும் வழியில் விழியில் கண்டால் உண்டாகும் மகிழ்ச்சி அளவற்றதாய் போகும் என்பது போல் மற்ற வடிவங்களாய் கதை, கட்டுரை மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது சிறிதும் ஐயமற்றது...

கண்டிப்பாக விரைவில் தொடர்க்கின்றேன்...

எந்தன் எண்ணத்தில் பிழையிருப்பின் அன்புடன் மன்னித்து பின்னூட்டம் இடவும்...


மிக்க நன்றி நண்பரே....