கழுத்து வரையுள்ள சிகையினை
சவுரியுடன் பிணைத்து நீளப்படுத்தி
தன்வனப்பினை மேம்படுத்தி மகிழும்
கவரும் பெண்நிலையும் இன்று
காலத்தின் கோலத்தில் மாறிவீற்றிருக்க...
இவனோ!
மூளையின் திறமையாய் தேர்வினை
எழுத்துவடிவில் தேர்ச்சி பெற்றிருந்தும்
உடலின் தகுதியாய் தேர்வில்
தோல்வியினை சந்திக்க நேருமென்ற
உணர்ச்சியின் காரணமாய் செய்தது...
காவல்வேலை தேடியவன் இன்றோ
கைதியாய் காவல் நிலையத்தில்
வஞ்சிமகளும் மாற்றுவழியில் கவர்ந்திழுக்க
வாலிபன் இவன்வாழ்கை பிழைப்பிற்கு - சிந்திக்காமல்
தன்னை சீரழித்துக்கொண்டது ஏனோ?
செய்தி
6 comments:
அருமை! வாழ்த்துக்கள்!
கடைசி ஐந்து வரிகள் அற்புதம்
அன்புள்ள எஸ்.கே,
தங்களின் அன்பான வரவிற்கும் மற்றும் பாராட்டிற்கும் மிக்க நன்றி...
அன்புள்ள இந்திரா,
மிக்க மகிழ்ச்சி & மிக்க நன்றி...
நாம் அன்றாடம் பார்க்கும் ,படிக்கும் ,சந்திக்கும் நிகழ்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் சாமர்த்தியம் வாசனிடம் உள்ளது.welldone pa
அன்புள்ள வெற்றிதிருமகள்,
மிக்க நன்றி அக்கா...
உள்ளத்தின் உணர்வுகளையும், உணர்ந்ததையும், படித்ததையும், பார்த்ததையும் மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவதில் ஒரு மகிழ்ச்சியாய் என்னுள்...
Post a Comment