ஓராயிரம் பார்வையிலே உன்பார்வையை
நான் அறிவேன் என்ற கவிஞனின் வரியும்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை
நான் எழுதுவேன் என்ற கவிஞனின் வரியும்
வாழ்வில் இது சாத்தியமோ என்றிருந்தேன்
உன்னை காணாத நாள்வரை...
வாழ்வில் இது சத்தியமே என்றுயுணர்ந்தேன்
உன்னை கண்ட நொடிமுதல்...
12 comments:
இனிமையான கவிதை!
//உன் பார்வையில் ஓராயிரம் கவிதை
நான் எழுதுவேன் என்ற கவிஞனின் வரியும்
வாழ்வில் இது சாத்தியமோ என்றிருந்தேன்
உன்னை காணாத நாள்வரை...
வாழ்வில் இது சத்தியமே என்றுயுணர்ந்தேன்
உன்னை கண்ட நொடிமுதல்//
இந்த மாதிரி கவிதை பாடுறதலாம் கல்யாணம் ஆகும்வரை தான் நண்பரே!! அதற்குபிறகு அவள் அப்படியொன்றும் அழகில்லை ன்னு பாட ஆரம்பித்துவிடுவீர்கள்.. ஆமாம் தானே!!!..
well said pushpa
அன்புள்ள சுரேஷ்,
வந்து ரசித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி...
அன்புள்ள புஷ்பா,
கல்யாணம் ஆகும்வரை என்றால்...
1. காதலித்த பெண்ணோடா? அப்படி (வாழ இறைவன் நமக்கு அருளவில்லையே...)
அப்படியெல்லாம் இல்லப்பா...
இரண்டாம் வரிகளை விட்டுவிட்டீர்களே...
அவளுக்கு யாரும் இணையில்லை... இதனையே திரும்ப மனைவியிடம் பாடுவோம்...(வேற வழி)
2. வேறொரு பெண்ணுடன் நிகழும் என்பதனால் அவளை காதலியாகவே பார்த்துக்கொண்டு... எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவளை இ(எ)ன்றும் காதலியாகவே நினைத்து எழுதிக்கொண்டே எப்பொழுதும் போல் இருப்போம்...
(உன்னால்தான் வாழ்கிறேன்... என்று)
மிக்க நன்றி தோழி...
அன்புள்ள வெற்றிதிருமகள்,
இது உலக நியதி தானே...
சத்தியங்கள் எல்லாம் என்றும் சாத்தியங்கள் ஆகும். உங்கள் காதலும் அப்படியே ஆக..வாழ்த்துக்கள்
very nice....very nice...
வார்த்தைகளுக்கா பஞ்சம் கவிஞரே உங்களிடம் !எதுகை,மோனைக்காக YOU ARE COMPROMISING WITH REPEATITION OF WORDS
அன்புள்ள ஆதிரா,
சத்தியமும் சாத்தியமும் உங்களின் வார்த்தை வழியிலும் எந்தன் வாழ்வில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நான்..
மிக்க நன்றி... என் அன்பான இனிய காதலுக்கும் வாழ்த்து கூறியமைக்கு...
அன்புள்ள Anonymous,
மிக்க நன்றி...
அன்புள்ள வெற்றிதிருமகள்,
வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை.. என்னிடம் வராமல் எங்கே தஞ்சம் அடைந்தன என்று தெரியாமல்...
மாற்றிக்கொள்கிறேன் என்னை...
மிக்க நன்றி...
Post a Comment