Sunday, October 10, 2010

கண்(ணே)...


கண்ணாடிமுன் நின்றால் மட்டும்தான்
எந்தன் உருவம் காட்டுகின்றது
உயிரற்ற பொருள் என்றாலும் - அதில்
உயிராய் என்னுள்ள உன்னை...

கண்மூடி நின்றாலே போதும்
உந்தன் உருவத்தை காட்டுகின்றது
உயிராய் உன்னை சுமக்கும் - எந்தன்
உள்ளத்தையும் குடியிருக்கும் உன்னையும்...

6 comments:

எஸ்.கே said...

அருமையாக உள்ளது கவிதை!

Aathira mullai said...

இதயக்கண்ணாடியில் பதிந்த உருவம் கண்ணாடி இன்றி கண்களில் தெரிவது...அழகு..கவிதையும் உணர்வும்..உயிரோட்டமாக..

vetrithirumagal said...

AGAIN REPETITION OF WORDS சரி செய்து கொள்ளவும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பரே...

தொடர்ச்சியான தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

இனி என் கண் இல்லை என்றாலும் அவள் முகம் மறையாது...

கண்ணும் கண்ணாடியும் இனி தேவை இல்லை ஒருமுறை கண்ட அவளை உருவத்தை முகத்தை நினைத்து வாழ்ந்திட... இதயம் இருக்கும்வரை...

மிக்க நன்றி.. என் உணர்வுகளை புரிந்துக்கொண்டமைக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகளே,

மிக்க நன்றி...

திருத்திக்கொள்ள முயற்சிகள் செய்துக்கொண்டே... சிறு காலங்கள் ஆகக்கூடும் ... அதனால் பொருத்தருள வேண்டுகிறேன் தம்பியை...