Tuesday, October 12, 2010

தாயும்... பிறந்தநாளும்...

தான் பெற்றெடுத்த
பிள்ளை அழுதிருக்க
தன் அ(மு)கம்
மகிழ்ந்த தாயை
மண்ணில் கண்டதுண்டோ?
உண்டெனில் நம்புவீரோ?
யாரென அறிவீரோ
நம்வாழ்வில் தினம்
காண்கிறோம் என்றால்
நீவிர் வியப்பீரோ?
நம்தாய் என்றெனில்
மனம் திகைப்பீரோ?

பிறந்த அந்த
ஒருநாள் மட்டும்நாம்
அழகுரலிட அவள்
சிரிக்கின்றாள்...
நம் பிறந்தநாளை
நினைத்து ஆண்டு
முழுதும் ஆனந்தம்
அடைக்கின்றாள்...

ஒருசிலரோ தினம்
தன் பிறந்தநாளை
கொண்டாடிக்கொண்டு!
தாயை அழவிட்டு
தான் மனநிறைவுடன்
வாழ்ந்துக்கொண்டு!!

Fantastic answer by Dr Kalam to a question asked at the BBC....

Question - Define BIRTHDAY.... .....?

Answer = The only day in your life, when you cried and your Mother was smiling..... .........:-)

8 comments:

Anonymous said...

தாய்மை பற்றிய ஆழமான வரிகள்.

எஸ்.கே said...

அருமை! ஆத்மார்த்தமான வரிகள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

தாய்மையை!
எந்நாளும் உணர்வோம்...
எந்நாளும் போற்றுவோம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

நம்மை பெற்றெடுக்கும் ஆத்மாவை மட்டுமல்ல பிற ஆத்மாக்களையும் என்றும் நம் உயிர்போல் எண்ணி பாதுகாப்போம்...

saravana said...

உங்கள் கவிதைகள் மிக அருமையாக இருக்கிறது ....

http://aadaillathavarigal.blogspot.com/

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...

தொடர்ந்து உங்கள் நல்வரவை வேண்டி...

R.KALYANAMOORTHY said...

pathu matham enai sumantha unakku enna naan koduthen,iruthiyil nenjil kolliai allva vaithen en thaye antha pavame enakku marupirappo rk. Thank u thanjai vasan for ur remindings about mother. YOUR VERSES ARE EXCELLENT.rEFINE AND DEFINE UR THINKINGS.gbu


R.kalyanamoorthy (Ph.D) ACF PCCF OFFICE CHENNAI 15.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கல்யாணமூர்த்தி,

மிக்க நன்றி ஐயா...

தங்களின் இனிய வரவிற்கும், அருமையான கருத்துரைக்கும் மற்றும் அன்பான வாழ்த்திற்கும்...

பத்து மாதம் சுமந்து அன்னை, அதிகபட்சமாக நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது அதுமட்டுமே இருக்கக்கூடும்...

இருக்கின்ற காலம்வரை காக்காத மகனாய் இருந்தாலும்... இறந்தபின் தன் சிதை வேக தன் மகனே தனக்கு கொள்ளி வைக்கவேண்டும் என்று வாழ்கின்ற அன்னைகளும் வரம் வேண்டும் அன்னைகளே அதிகம் நம்மண்ணில்...

அது பாவம் அல்ல.... அதுவே நாம் செய்த பாவத்தை கழுவும் புண்ணியம்...

கடவுள் உங்களுக்கும் நல்ல அமைதியையும், ஊக்கத்தையும், மற்றும் வளத்தையும் தர வேண்டுகிறேன் இறைவனிடம்...