Friday, October 29, 2010

மழையும்... கனவும்...


நீ அங்கே!
நான் இங்கே!!

மழையில் மெய்தனை
நனைத்துக்கொண்டு நீ!
கனவில் மெய்தனை
இழந்துக்கொண்டு நான்!!

உன்செயலால் கற்பனையில்
மழையை ரசித்துக்கொண்டு
இங்கே மழையே
இல்லாமல் போனாலும்...

கார்மேகம் சூழ்ந்த
வானமாய் உன்மீது
மோகம் கொண்டது
என்மனம்!

ஈரப்பதம் கலந்த
காற்றாய் என்மீது
இதமாய் வீசுது
உன்மனம்!

மழையில் மேனியில்
ஒன்றான துணிபோல்
அணைப்பிலும் முத்தத்திலும்
நனைத்து மூழ்கடித்தாய்...

மண்ணில் சேர்ந்திட்ட
நீர்த்துளியாய்
என்னுடல் கலந்து
மறைந்திட்டாய்....

6 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவி வரிகள் மிகவும் அருமை, தொடருங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி...

vetrithirumagal said...

mazhai mazhai indha ulagathil varugira mudhal mazhai!
yaar vandhadhu yaar vandhadhu
un nenjilae yaar vandhadhu!
kan oramaai vetkam vetkam

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மழையும் இல்லை அவளும் இல்லை... இரண்டுமே கானல் நீர்மழையாய் என்மீது பொழிந்து...

தங்களின் பாடல்வரிகளில் மேலும் மெய்மறந்தேன்

மிக்க நன்றி...

elamthenral said...

எனக்கு ஒரு doubt காதலிக்கிறவங்கள விட காதலில் தோற்றவர்களிடமிருந்து தான் கவிதைகள் வருவது உண்மையா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

காதலித்தால்தான் கவிதை எழுத முடியும்...

சந்தோஷத்தில் நாம் பலவற்றை மறந்து போவதுண்டு... (காதல் புரிதல் சமயம்)

சோகத்தில் அப்பொழுது மறந்ததும் தற்பொழுது சேர்த்து எழுதிட வைக்கும்... (காதல் பிரிந்த சமயம்)

என்பது என்னுடைய கருத்து... எனவே தங்களுடைய கேள்விக்கு காதலின் நினைவுகளில் அதிக கவிதைகள் மலரும் என்பது உண்மையாய்... என் பதிலாய் தங்களுக்கு....

தங்களுக்கு தெரியாத ஒன்றல்ல...