Sunday, March 27, 2011

இதழில் க(வி)தையெழுதும் நேரமிது....




வெள்ளைநிற காகிதத்தின் மேனியில் மையால்
உன்னை தினம் கவிதையாய் வடித்த
என்விரல்களை சற்றே ஓய்வெடுக்க சொன்னாயோ?...

காகிதத்தின் மீதுநீ கொண்ட பொறாமையால்
கவிதை இனி வேண்டாமென கூறியதன்
அர்த்தத்தை உள்ள(ம)றிந்து கொண்டதுயென் தாமதமோ?...

காகிதத்தில் எனைநீ வரைந்த கவிதைகள்போதும்
உடலும்உயிருமாய் உனக்காய் ஒட்டியிருக்கும் எந்தேகத்தில்
கவிதைபடைக்கும் நாள்எந்நாளோ என்றாயே பார்வையில்...

அதனால் என்னவோ என்வலக்கையை நீசிறையெடுக்க....
ரோஜாபோன்ற பூவிதழான உந்தன் மெய்யில்
என்னிதழ்கள் புத்தம்புதுக் கவிதையை கிறுக்கின்றதோ?

நெற்றியில் முத்தமிட்டு சத்தத்துடன் ஆரம்பிக்க
வாக்கியமின்றி வார்த்தையின்றி ஹைக்கூ கவிதையாய்
சொற்கள் ஒலிக்கும்ஒலியிலும் கண்மயங்கி போகின்றாயோ?

உன்கண்கள் சொக்கியிருக்கும் அழகினிலும் தீண்டலிலும்
என்முதல் முத்தத்தின் உள்ளுணர்விலே காணாத
சொர்க்கங்களை இச்சென பதிக்கையில் உச்சமாய்காண்கிறேனடி...

(உன்னை சந்திக்குவேளையில் இப்படி பலகவிதைகள்
படைத்திட நெஞ்சுக்குள் ஆசைதான் பலகோடி...)

8 comments:

கமலேஷ் said...

பழசெல்லாம் படிச்சேன் வாசன்
ரொம்ப நல்லா இருக்கு எல்லாமே..

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் இயங்கி கொண்டே இருக்கவும்
மொழி மேல் ஒரு காதல் வேண்டும். அது அதிகமாவே உங்ககிட்ட இருக்கு.

அடிச்சி ஆடுங்க..

தடம் மாறிய யாத்ரீகன் said...

பாராட்டுக்கள்!!! வார்த்தை ஜாலம்.

அன்புடன் மலிக்கா said...

ம்ம் எழுதுங்க எழுதுங்க..

கவிதையோ கதையோ எழுதனுமுன்னு முடிவுபண்ணியச்சி எழுதுங்க,,..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா...

உங்களின் ஊக்கத்திலும் உற்சாகத்திலும் என் மனம் மகிழ்கின்றது...

என்னுடைய பழைய எழுத்துகளை படித்தமைக்கு மீண்டும் ஓர் நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அசோக்,

மிக்க நன்றி...

தங்களின் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும்...

என்றும் உங்கள் வரவை நாடி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மலிக்கா,

மிக்க நன்றி...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து உற்சாக படுத்துவதற்கு...

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள் ரொம்பவே ரசித்தேன்

தமிழ்த்தோட்டம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள யூஜின்,

மிக்க நன்றி...

நீங்கள் ரசித்து நமது இணையத்தில் வெளியிட்டமை மிக்க மகிழ்ச்சி...