Wednesday, August 4, 2010

அழகு தேவதை...


முகமெனும் தடாகத்தில் நீந்தும்
வாலைமீன்களோ உன்னிரு கண்கள்?
இல்லையில்லை!
வானமெனும் ஆகாயத்தில் மிதக்கும்
சூரியசந்திரனே உன்னிரு கண்கள்...

பவளத்தின் மையத்தில் கோர்த்திட்ட
முத்துகளோ உன் புன்சிரிப்பு?
இல்லையில்லை!
தாமரையின் இடையே மலர்ந்திட்ட
முல்லைபூவே உன் புன்சிரிப்பு...

ஆழ்கடலில் மறைந்திருக்கும் வெண்ணிற
சங்கோ உந்தன் கழுத்து?
இல்லையில்லை!
அணிகலன் பொலிவுறசூடும் மெல்லிய
மேடையே உந்தன் கழுத்து...

அங்கமெனும் தங்கத்தில் மிலிர்கின்ற
பொன்னாடையோ உந்தன் பட்டாடை?
இல்லையில்லை!
பகலவனின் பட்டொளியில் பூத்திட்ட
புத்தாடையே உந்தன் பட்டாடை...

கன்னியின் சிரிப்பில் மயங்காத
ஆடவனும் பூமியில் இருக்கலாம்!
ஆனால்!!
கள்ளமற்ற உன்சிரிப்பை ரசிக்காத
உள்ளம் இனிபிறக்கவும் வாய்ப்பில்லை!!!

வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.

10 comments:

Anonymous said...

Arumai..

சிந்தையின் சிதறல்கள் said...

மழலையின் சிரிப்பில் ஆனந்தமதிகம்
உங்கள் வரிகளில் சுவை அதிகம் பாராட்டுகள் நண்பா

அ.முத்து பிரகாஷ் said...

கவிதை குழந்தை இரண்டில் எது மிகு அழகு ...
பட்டிமன்றம் வைப்போமா ...
தோழர் வாசன் !
நிழற்படத்தில் புன்னகைப்பது உங்கள் குழந்தை தானே?

prince said...

nijamaana alaguthaan...
athupola unga kavithaiyum alagaa irukku ...

Anonymous said...

chaa...ennama eluthireenga..nalla varunanai...pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெய்,

மிக்க நன்றி...

புகைபடம் தந்து உதவியமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க மிகு மகிழ்ச்சி தங்களின் அன்பான வரவிற்கும் ஆனந்தமான பின்னூட்டத்திற்கும்...

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க மகிழ்ச்சி சகோதரா தங்களின் பின்னூட்டத்திற்கு...

அது எனக்கு யார் என்றே தெரியாத குழந்தை... அது என் நண்பரின், நண்பர் மகள்...

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரின்ஸ்,

மிக்க நன்றி நண்பா...


இளவரசே சொல்லிய பிறகு எனக்கு மகிழ்ச்சி தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விஜய்,

தங்களின் இனிய வரவிற்கும் பின்னூட்டத்திற்கும்...

மிக்க மிகு நன்றி...