Friday, August 20, 2010

ஏக்கமும்... நீயும்...

கற்றது கைமண் அளவு
கல்லாது உலகளவு...
அப்படியிருக்க!!!
எந்தன் இதயமோ ஒருகைபிடியளவு
அதில் கொள்ளாமல் போகின்றது உன்நினைவு
பின் எப்படி?
என் உலகமாகிய உன்னை - நான்
அதில் சுமப்பேன்? ஏக்கங்களோடு...

10 comments:

க.பாலாசி said...

ஏக்கங்கள் இருக்கத்தான் செய்யும்...சுமக்கறதுலக்கூட ஒரு சுகம் கிடைக்கத்தானே செய்யுதுங்க வாசன்...

தோழி said...

//அதில் சுமப்பேன்? ஏக்கங்களோடு... //

ஏக்கதோடதான் சுமக்கறீங்களா?
விருப்பத்தோட இல்லையா?

சிந்தையின் சிதறல்கள் said...

சுகமான ஏக்கங்களும் சுமப்பதில் ஆனந்தமே

Aathira mullai said...

இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை..உன்னை மீறவே ஊருக்குள் ஆள் இல்லை.. ஏக்கம் துக்கம் இரண்டும் தூக்கம் கலைக்கும் வாசன்..

elamthenral said...

//எந்தன் இதயமோ ஒருகைபிடியளவு
அதில் கொள்ளாமல் போகின்றது உன்நினைவு//

இவ்வரிகள் மிக அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் தஞ்சை.வாசன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிகவும் சரியா சொன்னீங்க நண்பா...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

ஏக்கத்துடன் இல்லை... விருப்பத்துடன் தான்...

ஏக்கம், அவள் நினைவுகளே என்னுள் அடங்காத போது... நினைவுகளை தரும் உருவத்தை உயிரை மற்றும் இனிவரும் நினைவுகளை எப்படி சுமப்பது என்றுதான்...

விருப்பம் கொண்டது மீதுதான் ஏக்கம் வரும்... எதுவாயினும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

ஏக்கங்களை எழுதுவதிலும் சுகமும் சுவையும் என்னுள்...

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

சிலரின் தாக்கமும் தங்களின் ஊக்கமும்
தூக்கத்தை தொலைக்கவும் தொடரவும் வைக்கின்றது...

துக்கத்தை துறக்கவும் வைக்கின்றது...

மிக்க மிக நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

வரிகளை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி...