Wednesday, August 25, 2010

மேகம்...

விண்வெளியான உந்தன் தேகத்தை
வானமாய் ரவிக்கை மறைத்திருக்க
கார்மேகம் வரைப்படமாய் பூத்திருக்க - கண்டு
களித்திடும் மழையை எதிர்பார்த்துக்கொண்டு...

மேகமாய் தோன்றியது உந்தன்
மேனியில் சுரந்திட்ட வியர்வையோ?
அல்லது கேசத்தின் உச்சியிலிருந்து
அருவியாய் வழிந்திட்ட நீரோ?

இவனோ வாட்டியெடுக்கும் கோடையிலும்
இயற்கையாய் மனதிற்குள் ரசித்துக்கொண்டு...

4 comments:

Unknown said...

அழகான வரிகள்

aavee said...

//மேகமாய் தோன்றியது உந்தன்
மேனியில் சுரந்திட்ட வியர்வையோ?
அல்லது கேசத்தின் உச்சியிலிருந்து
அருவியாய் வழிந்திட்ட நீரோ?//

அழகாய் பொங்கிற்று தஞ்சை வாசனின் கவிதை ஊற்று!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

தங்களின் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆவி,

ஆவிக்கு கால்கள் இல்லை என்பார்கள்... ஆனால் தங்களின் கால்கள் என் வலைபக்கத்தில் பதித்ததில் மிக்க மகிழ்ச்சி...

ஆவியின் பெயர்காரணம் சுருக்கமா நல்லா இருக்கு...

தங்கள் வரவையும் நட்பையும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி...