Saturday, August 28, 2010

உணவகத்தில்...


என்னருகில் அமர்ந்துநீ
உண்ண நினைத்தபோதும்
என்மனதுக்குள் ஆசையிருந்தும்
உண்ணமறுத்து எதிரமர்ந்தது
வருத்ததை தந்திருக்கலாம்...

ஆனால்!
உண்ணுவதற்கு குனியும் தருணத்தைவிட
மற்றநேரங்களில் உன்முகத்தை மட்டும்
காணவிரும்பி மற்றவர்களின் முகத்தை
காணமறுத்ததை இன்றாவதுநீ உணர்வாயோ?..

6 comments:

VELU.G said...

காதல் வாசன் காதல்

கவிதை அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

அது... இது தானா?

அப்ப கொஞ்சம் உஷரா இருக்க சொல்லனும்...

:)அந்த பெண்னை...


மிக்க நன்றி...

Aathira mullai said...

வாசன் நீ உணர்வுகளின் மலையுச்சி..அதனால் விழுகிறது கவியூற்று..

நீ நினைவுகளின் நேர்மை..நிஜமாய் உதிர்கிறது கனிச் சொற்கள்..

சுவைகளின் அமிழ்து...உன் கவி என்றும் இனித்திடும் எம் மனதில்...

உடன் உண்ண மறுத்ததால் வருத்தமோ!! அருமை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

அவளுடன் அருகில் அமர்ந்து உண்ணாமல் எதிர் அமர்ந்து உண்டதுதான் வருத்தம் அவளுக்கு... எனக்கும்தான்...

மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு... வாழ்த்திற்கு...

இங்கே நன்றியை தவிர சொல்ல செய்ய இயலாமல் நான்...

vetrithirumagal said...

நேர்மையான வரிகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...

தங்களின் நேர்மையான வாழ்த்திற்கு...