தண்டனைகள் கடுமை ஆகும்வரை
குற்றங்கள் குறையாது என்பேன்...
அதற்காகவா?
உந்தன் ஒருஅழைப்பை எடுக்க
இயலாமல் போன காரணத்திற்கு
உன்னை பலமுறை அழைத்தும்
அழைப்பை எடுக்கமறுத்து தண்டனையை
எனக்கு அளித்து கொண்டு...
தண்டனைகளில் மிககொடியது பேசாமல்
இருப்பதும் பேச மறுப்பதும்தான்
என்பதனை உணர்வுகளில்நீ உணர்ந்தோ?
உணராமலோ? தவிப்புடன் நான்...
(காரணம் ஆயிரம் சொன்னாலும்... ஏற்க முடியாமல் இருவரும்...)
12 comments:
பேசாமலிருப்பதை விட சுடு சொல்லேனும் மொழிந்து என் நண்பன் துயர் தீர்பாரோ
ஆமா இது அவங்களுக்கு தெரியுமா?
நல்ல கவிதை..
அன்புள்ள ஹாசிம்,
மிக்க நன்றி... தங்களின் அன்பான சிபாரிசுக்கு...
துயர் நீக்கப்பட்டது...
அன்புள்ள பாலாசி,
தண்டனை கொடுக்கிற மகாராணிக்கு தெரியாமலா இருக்கும்....
மிக்க நன்றி...
உண்மை அன்பில். தண்டனை தருவதும் பெறுவதும் இல்லை..இருந்தாலும் அதில் சுகமே...
மறுமொழி பெறாத அந்தக் கணங்களின் தவிப்பு நரகத்திற்கு அருகாமையில்..
அதுவே
சொர்க்கத்திற்கும் அருகாமையில்..
என்னைச் சிந்திக்க வைத்த கவிதை. அருமை வாசன்..
தண்டனை கொடுத்த மகாராணி மனம் மகிழ்வார் இக்கவிச்சுவையில்.
அன்புள்ள ஆதிரா,
முதலில் உங்களை சிந்திக்க வைத்தமைக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்...
மனம் மகிழ்வார் என்ற உங்கள் வரிகள் என்மனதிற்கு மகிழ்வாய்...
துன்பத்திற்கு பிறகு இன்பம் என்றூம் நிலைத்திருக்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள். அதில் இதுவும் ஒன்றாய்...
மிக்க மிகு மகிழ்ச்சி தங்களின் உணர்வுகளை இங்கே வெளிகாட்டியமைக்கு...
//தண்டனைகளில் மிககொடியது பேசாமல்
இருப்பதும் பேச மறுப்பதும்தான்//
(என் உயிரில் சரி பாதி உனக்கென்று தந்த போதும் ) இந்த கூற்று சரியென்றால் தண்டனை இருவருக்குமே!
சரியான புரிந்துகொள்ளுதலே இதற்கு மருந்தாக முடியும்.
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!!
உங்கள் கவிதை உணர்வுகளின் வெளிப்படாக அமைந்திருக்கிறது..
அன்புள்ள ப்ரின்ஸ்,
தண்டனை இருவருக்குமே என்பது உண்மைதான்... உண்மையான அன்பில்... தங்கள் கருத்து போல...
காரணம் அறிந்து புரிந்து கொண்டால் தண்டனைகளே இல்லாமல் போகும்... குற்றங்களே இல்லாமலும் போகும்...
உணர்வுகளைத்தான் இங்கே எழுதுகின்றேன்...
மிக்க நன்றி நண்பா...
சின்ன சின்ன ஊடல் இருந்தால்தான் காதல் ரசிக்கும் இனிக்கும் பின் நாளில் அசை போட இது தேவை
அன்புள்ள வெற்றிதிருமகள்,
ஊடலும் கூடலும் நிறைந்தது தானே வாழ்க்கை...
கண்டிப்பாக வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளாய் அமையும்...
காதலில் பேசாமலிருப்பதை விட பேச மறுப்பது தான் பெரிய தண்டனை..
சரிதானே வாசன்??
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி ...
வாசித்தவுடன் பின்னூட்டம் இட்டமைக்கு...
அன்பில் எல்லாம் இனிமையானதாய்... இன்றும் நினைத்து பார்க்கும்போது...
Post a Comment