சன்னலின் முதுகுக்கு பின்னால் இருந்தவள் இன்று
சன்னலை முதுகுக்கு பின்னால் சுமந்து செல்கிறேன்
நிலவுக்கு இணையாக அழகுக்கு ஒப்பிடப்பட்டவள் இன்று
நிலவின் மண்ணிலே அறிவால் மிதந்துநடந்து செல்கிறேன்
வீட்டுவேலைகளை செய்வதற்க்கு என்றே பழக்கப்பட்டவள் இன்று
வீட்டிலிருந்தே வேலைகள் யாவற்றையும் செய்து முடிக்கிறேன்...
உலகிற்கு முகம் தெரியாமல் அடைக்கப்பட்டவள் இன்று
உலகத்தையே தன்னுடைய அறைக்குள் நிலைநிறுத்தி மகிழ்கிறேன்
திரைப்பட பாடல்களில் பூத்தொடுப்பவளாய் வந்தவள் இன்று
திரைப்பட பாடல்களுக்கு பாக்களை தொடுத்து கொடுக்கிறேன்
வாழ்க்கையில் எத்தனையோ முன்னேறிவிட்டேன் ஆனாலும் இன்று
வாழ்க்கைக்கு மற்றொருதுணை தேவையென்பது மட்டும் மாறாமல்...
கணவன் என்மீது அன்பில்லாதவன் என்றாலோ?
கணவன் பிரிந்து சென்றுவிட்டான் என்றாலோ?
கணவன் இறந்து மடிந்துவிட்டான் என்றாலோ? - இந்நிலை
ஒன்றில் இருந்து மட்டும்நான் மாறமுடியாமல்.
6 comments:
மாற்றம் மட்டுமே மாறாதது
வாழ்க்கையில் எத்தனையோ முன்னேறிவிட்டேன் ஆனாலும் இன்று
வாழ்க்கைக்கு மற்றொருதுணை தேவையென்பது மட்டும் மாறாமல்...
its really true.nice thinkinng.we expect more from you.
Read more: http://thanjai-seenu.blogspot.com/2011/11/blog-post.html#ixzz1cYcB8wJ8
அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
அன்புள்ள சூர்யஜீவா,
மிக்க நன்றி தோழா...
காலம் மாறாதா? என்ற ஏக்கத்தோடு அவர்கள்...
அன்புள்ள உமா,
மிக்க நன்றி அக்கா...
இதுல எதுவும் உள்குத்து இல்லையே....
அன்புள்ள வாஞ்சூர்,
மிக்க நன்றி...
Post a Comment