Thursday, November 3, 2011

எது முத்தம்?

உள்ளிருக்கும் அன்பினை
வெளிக்காட்டிட மெல்ல
உதட்டால் கொடுப்பது
மட்டும்தான் முத்தமா?
இல்லை???
உறுப்புகள் ஒன்றோடு
ஒன்று உரசுவதும்
முத்தமா?

கைவிரல்கள் தொடுவதும்
முத்தமோ?
கால்விரல்கள் தீண்டவதும்
முத்தமோ?
விழிகள் ஒன்றையொன்று
உரசாமலே பற்றியெரிவதும்
ஒருவகை முத்தமோ? - இல்லை
சத்தம்வந்தால் தான்முத்தமோ?

2 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சத்தம் வந்தால் மட்டுமல்ல 'சந்தம்' எழுந்தாலும் அது முத்தம்தான்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழன்வீதி,

மிக்க நன்றி நண்பரே...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி...

சொந்தமாய் ஆனவளுக்கு
சத்தமாய் பற்பல
முத்தங்களை கொடுக்க
சந்தம் ஆகிறது....