
சொக்க தங்கமாய் மண்ணில் பிறந்தாய்!
பண்பின் அங்கமாய் மண்ணில் வளரவேண்டும்!!
மின்னும் வைரமாய் மண்ணில் பிறந்தாய்!
கனிதரும் மரமாய் மண்ணில் நிலைக்கவேண்டும்!!
வெண்ணிற முத்தாய் மண்ணில் பிறந்தாய்!
குறையாத சொத்தாய் மண்ணில் திகழ்ந்திடவேண்டும்!!
ஜொலிக்கும் வெள்ளியாய் மண்ணில் பிறந்தாய்!
மணக்கும் மல்லியாய் மண்ணில் மணந்திடவேண்டும்!!
மங்களமான பவளமாய் மண்ணில் பிறந்தாய்!
அட்சய கவளமாய் மண்ணில் இருந்திடவேண்டும்!!
கவரும் மரகதமாய் மண்ணில் பிறந்தாய்!
மயக்கும் கீதமாய் மண்ணில் இசைத்திடவேண்டும்!!
ரசிக்கும் ரத்தினமாய் மண்ணில் பிறந்தாய்!
ஒய்யார ரதமாய் மண்ணில் வலம்வரவேண்டும்!!
புஷ்ப ராகம்போல் மண்ணில் பிறந்தாய்!
ஆனந்த ராகமாய் மண்ணில் ரசித்திடவேண்டும்!!
கோமேதகம் போல் மண்ணில் பிறந்தாய்!
மழை மேகமாய் மண்ணில் சிறந்திடவேண்டும்!!
கண்ணின் மணிபோல் மண்ணில் பிறந்தாய்!
சிறந்த பெண்மணியாய் மண்ணில் வாழ்ந்திடவேண்டும்!!
முதல் வரியாய் வீட்டில் பிறந்திட்டாய் எங்களுக்காக
இரண்டாம் வரியாய் நாட்டில் வளர்ந்திடுவாய் மற்றவர்களுக்காக...
6 comments:
அன்பு உள்ளங்களின் மத்தியில்
அருளாய் மலர்நத அருட்கொடையிது
அதன் விழாவாய் சிற்றப்பனின்
அற்புத வரிகளில் கொண்டாடக்கண்டு
அத்தனை வேண்டுதலும் ஈடேற
அன்புடன் பிரார்த்திக்கிறேன்.
அருமையான கவிதை நண்பா
புதுமலராய் மலர்ந்த மகாலட்சுமியே; ஒளிவிளக்கே வருக வருக வந்து அனைவரின் மனதிலும் குடிகொள்க; எல்ல நலமும்; இறைவனின் ஆசியும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்........
வாசன் அண்ணா உஙகளின் கவிதை வரவேற்பு அற்புதம்.......
குழந்தை வளர்ந்த பிறகு படித்து பார்த்து மகிழட்டும்......
முதல் வரியாய் வீட்டில் பிறந்திட்டாய் எங்களுக்காக
இரண்டாம் வரியாய் நாட்டில் வளர்ந்திடுவாய் மற்றவர்களுக்காக
nice one...nga
உங்களின் மகிச்சியை பகிர்ந்துகொள்வதோடு....குழந்த்தைக்கு ஆசிர்வாதங்கள்.
கவிதை நன்று.pon.
அன்புள்ள ஹாசிம்,
அசத்தலான வரிகளில்
அகர வரிசையில்
அசுர வைக்கும்
அழகிய வகையில்...
மிக்க மகிழ்ச்சியும்... நன்றிகளும்...
அன்புள்ள முரளி,
மிக்க மகிழ்ச்சி தங்களின் இனிதான வரவிற்கும்... இதமான மனதார வாழ்த்திற்கும்...
மிக்க நன்றி...
அன்புள்ள பொன்,
மிக்க நன்றி... என்னின் மகிழ்ச்சியில் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாது தங்களின் ஆசிர்வாதங்களை அள்ளி தந்தமைக்கும்...
Post a Comment