Wednesday, July 28, 2010

நீ எந்தன் வானம்...


உன் பெயரே
என் வானமானது...
காரணம்?
சூரியனும் சந்திரனும்
ஒன்றாய் இணைந்திருப்பதனால்...
மட்டுமில்லை
என்னருகில் நீயிருந்தால்!
உன்னால் சூரியனின்
ஒளிபோல் பிரகாசிக்கின்றேன்...
என்னருகில் நீயில்லாவிடினும்!!
உன்நினைவால் நிலவின்
குளிர்போல் மயங்குகின்றேன்...

6 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நீண்ட இடைவெளிக்கப்புறம் சந்திப்பதில் மகிழ்ச்சியும் இடைவெளிக்கு வருத்தங்களும் ...

எத்துனை எழுதினாலும் தீராததாயிருக்கிறது உங்கள் காதல் ...

மகிழ்ச்சி!

Aathira mullai said...

உலக இருளை விரட்டும் இரு சுடர்களுக்கு கவி ஒளி கொடுத்த உன்னைக் கவிநிலவன் என்றுரைப்பதா கவிதை உலகின் ஒளிவிடும் ஆதிரன் என்றுரைப்பதா.. அருமை.. பாராட்டுக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க மகிழ்ச்சி... மீண்டும் தங்கள் வரவு... நல்வரவாய் சிறிய இடைவெளிக்கு பிறகு என்றாலும்... தொடரட்டும்...

காதல் மீது கொண்ட காதல் தீராத தாகமாய்... வற்றாத கங்கையாய்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

உங்கள் இயற்பெயரிலும், புனைப்பெயரிலும் என்னின் கவிதைக்கு வரியாய் வானமாய்... எனக்கும் வானமாய்...

Aathira mullai said...

எனக்குக் கவிதை? என் இருபெயர்களை உங்கள் கவிதைக்குக் கருப்பொருளாய் கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி வாசன்.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

வல்லவனாய் ஆக்குவதே நீங்கள்தானே...