Tuesday, August 17, 2010

உன்பற்று....


இனிப்பின் இன்சுவை இதுவென்று
தெரிந்திருந்து தின்றபோதும் தெரியாத
சுவையிது எதுவென திகைத்தேன்? - உன்னுடைய
கரம்பற்றி வந்ததெனபின் உணர்ந்தேன்...

8 comments:

க.பாலாசி said...

என்னமோ போங்க.. தொட்டனைத்தூறும் மணற்கேனிப்போலதான் இந்த காதலும் அதனூடே பொங்கும் கவிதைகளும்...

நல்லாயிருக்குங்க வாசன்...

அண்ணாமலை..!! said...

நண்பரே! வார்த்தைகள் மெருகேறிக்கொண்டே செல்கின்றன!
அருமை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

நலமா? ரொம்ப நாளா காணவில்லை?

காதல் புரிகின்ற தருணம் சொர்கம்
காதலை பிரிகின்ற தருணம் நரகம் தான்...


மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள் அண்ணாமலை,

மிக்க நன்றி நண்பரே...

எல்லாம் தங்கள் போன்றவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தான்...

வைகறை நிலா said...

(சிலருடைய கவிதைகளை) இங்கு உங்கள் கவிதைகளை வாசித்தபின் ஒன்று புரிகிறது..பெண்களைவிட ஆண்கள்தான் அற்புதமாக கவிதை எழுதுவார்களோ என்று..

(பெண்கள்..என்னை மன்னிப்பார்களாக..)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

பெண்ணே கவிதை என்பதனாலோ? ஆண்கள் பெண்களை விட அதிகமாக எழுதிக்கொண்டு...

ஆனால் ஒன்று சொல்லுகின்றேன்...

கவிதையே கவிதையை அதிகமாக ரசிக்கும் நிலை அதிகம்...

கவிஞர்களை உருவாக்குவதனாலோ? கவிதைகளை மட்டும் ரசித்துக்கொண்டு... இன்றும்...

மிக்க நன்றி....

(ஆண்கள்... என்னை மன்னிப்பார்களாக)

vetrithirumagal said...

வாழ்வுக்கு பக்கம் வந்தேன்
சாவுக்கு பக்கம் நின்றேன்
ஏன் என்றால் காதல் என்பேன் -தாமரையின் வரிகள் சில.விட்டு பாருங்கள் பெண்கள் களத்தில் கலக்குவதை .

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

கண்டிப்பா பெண்களிடம் திறமை இருக்கிறது.. வெளிக்காட்டுவதில் இந்த சமூக சூழலில் தடையாய்...

மிக்க நன்றி.. இனிய பாடல் வரிக்கும்..