Thursday, March 18, 2010

பரிதாபம் - ஏழ்மை...










புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...

கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...

கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே

சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...

சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...

சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...

மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...

தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...

அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...

ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...

இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.

 
(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)

2 comments:

வைகறை நிலா said...

ஒரு கவிதையில் நம் நாட்டின் நிலையை சரியாக சொல்லிவிட்டீர்கள்.
இந்தியாவின் நிலை மாற வேண்டும்..பொருளாதாரத்தில் தாழ்ந்திருப்போர், உயர்ந்த நிலை அடைய வேண்டும்..
அதற்கு இறைவன் அருள் செய்ய வேண்டும்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

என்னின், தங்களின் மனம் போல அனைவரின் மனம் மாறிட இறைவனை நானும் வேண்டுகின்றேன்.