Wednesday, March 3, 2010

மகிழ்வோம்...மகிழ்விப்போம்...


அறைகளற்ற குடிசையில்
அனைவரும் ஒரிடத்தில்
நிசப்தமான நேரத்தில்
ராக்கோழியின் ஓசையில்
ஏழையின் மாளிகையில்
ரம்மியமான ராத்திரியில்
திண்ணையின் தரையில்
எண்ணெயில் ஒளிரும்தீபத்தில்
குடும்பத்தினரும் கூட்டமாய்
உடன்பிறவாத சிலரும்
ஒன்றாய் கூடியமர்ந்திட
உண்டுமகிழும் மானிடர் அங்கே...



ஆடம்பரமான கட்டிடத்தில்
ஆளுக்கொரு திசையில்
ஆர்பாட்டமான இசையில்
உணவகம் என்னுமிடத்தில்
இருள்சூழ்ந்த இரவுபொழுதில்
மெழுகுவர்த்தியின் ஒளியில்
மேசையின் மீதமர்ந்து
காதலியுடனோ குடும்பத்துடனோ
கூடியும் குடியுமாய்
ஆயிரம்கணக்கில் செலவளிக்கும்
பகட்டான வாழ்வில்வாழும்
மானிடரும் இங்கே வாழ்கையாய்...


(சிந்திப்போம் நம்முடைய ஒருநாள் செலவு ஒர் ஏழை குடும்பத்திற்க்கு ஆகும் ஒருமாத உணவு. மெழுகுவர்த்தியின் ஒளியில் உண்ணும் உணவை ஒரு வேளை பொழுது உழைக்கும் வர்க்கத்துடன் உண்டு, நாமும் மகிழ்வோம் அவர்களையும் மகிழ்விப்போம்)
ImageBoo Free Web Hosting

4 comments:

அன்புடன் மலிக்கா said...

நிச்சயம் அனைவரும் யோசிக்கவேண்டி விசயம் வாசன்.
வரிகள் விளையாடி இருக்கின்றன அருமை. மகிழ்வோம் மகிழ்விப்போம்..

நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்..

http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

வைகறை நிலா said...

மனிதநேயத்தை சொல்லும்
அழகான கவிதை.
வாசிகின்றவர் உள்ளத்தில்
அன்பு, பரிவு, கனிவு போன்ற
உன்னதமான உணர்வுகளை
உருவாக்ககூடியது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

தங்களின் வருகைக்கும் மற்றும் அன்பான எண்ணங்களுக்கும் என் நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து மகிழ்வோம்... மகிழ்விப்போம்...

தங்களின் அன்பான, பரிவான, கனிவான கருத்திற்கு என் நன்றிகள்...