Sunday, March 14, 2010

முதிர்கன்னி...



கலந்தும் கொண்டேன் எத்தனையோ சுயம்வரம்
இதுவரை யாரும் பற்றவில்லை என்கரம்
இன்றும் நானோ வையகத்தில் தனிமரம்
இறைவன் வேண்டாமலே எனக்களித்த வரம்
எங்கள்மீதும் சற்று காட்டுங்கள் பரஸ்பரம்
தாரமெனும் வாய்ப்பு தாருங்கள் ஒருதரம்....

(முதிர்கன்னியாய் பிறந்தது அவர்கள் பிழையில்லை... குறைந்தது நம்முடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும்  அவர்களை பகடையாக்காமல் தவிர்ப்போம்.)

4 comments:

'பரிவை' சே.குமார் said...

nalla kavithai.
varumaiyil vatum kudumpaththil ellaam muthirkannikalin kanneer odikkonduthaney irukkirathu tholarey

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழர் குமார் அவர்களே,

நீங்கள் கூறுவது முற்றிலும்... இது போன்ற முதிர்கன்னிகளின் கண்ணீர் துடைக்கபடவேண்டும்... இவர்களை போன்றோர் எதிர்காலத்தில் இப்படி ஆளாக நேரிடாத வண்ணம் அனைவரும் யோசித்து(நம் குடும்பத்தில் ஒருவரென நினைத்து)செயல்படவேண்டும்...

தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்தினை வெளியிட்டமைக்கும் என் மகிழ்ச்சியான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Aathira mullai said...

உலகைப் புரட்டிப்போடும் ஒரே அயுதம் எழுத்து. அது தங்கள் கைகளில் சிந்து நடை போடுகிறது உலகை மாற்றியே தீருவேன் எனக் கட்டியம் கட்டிக்கொண்டு.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் வருகையும் பாராட்டும் இங்கே என்னை மேலும் ஊக்குவிக்கும் விதமாக...

மிக்க மகிழ்ச்சி...

என்னுடைய நன்றிகள் என்றும்...