Friday, July 16, 2010

உன் அழகும்...உன் அன்பும்

கண்ணே!!!
என்இளமை முதல் இன்று
என்முதுமை வரை வாழ்வில்
என்கண்ணில் காண்கின்றேன் நித்தம்
எத்தனையோ பதுமை!
ஆயினும்...
உன்னை கண்டபின் உணர்ந்தேன்
உள்ளத்தின் உணர்வாய் உன்னைவிட
இறைவன் படைத்திட இனி - எதுவும்
இல்லை உலகில் புதுமை...

8 comments:

க.பாலாசி said...

பெண் என்றுமே அதிசய புதுமைதாங்க வாசன்... ரசிக்கின்ற கண்களை உடையவர்களுக்கு...

நல்ல கவிதை...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

வணக்கம் நண்பா! நான் பெண்னை மட்டும் மையமாக வைத்து எழுதவில்லை... குழந்தையை மையமாக வைத்துதான் எழுதினேன் என்று நான் சொன்னால் நீங்க நம்பிதான் ஆகனும்...

மிக்க நன்றி...

elamthenral said...

அருமையான வார்த்தைகள்...

அண்ணாமலை..!! said...

அழகிய கவிதை வாசன்!
நன்றிகள்!

வைகறை நிலா said...

இறைவனின் படைப்பில் உள்ள புதுமைகளே கவிஞர்களின் கவிதைக்கு கருவாய் அமைகிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

நம்மை போன்றவர்களுக்கு புதுமையை கருவாக்கி கவிதை வடிக்கும் ஆற்றல் அளித்த இறைவனுக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்...