Friday, July 23, 2010

எல்லாம் உன்னாலே...


உன்னின் விரிந்த நெற்றியில்
பரந்த எண்ணங்களை பார்க்கின்றேன்...
உன்னின் காந்த விழிகளினால்
ஏகாந்த உணர்வுகளை அடைகின்றேன்...
உன்னின் சிவந்த கன்னங்களில்
கவர்ந்த ரோஜாவினை ரசிக்கின்றேன்...
உன்னின் சாந்த மொழியினால்
சித்தாந்தம் வேதாந்தம் கேட்கின்றேன்...
உன்னின் மொத்த அழகினில் - எப்பொழுதும்
என்னை நானே மறக்கின்றேன்...

4 comments:

Aathira mullai said...

இது கவி மழை இல்லை.. கற்கண்டு மழை..கற்கண்டு கண்டு மகிழும் மழலையாய் எங்களையும் குதூகலிக்கச் செய்கிறது தங்கள் மழலை மழை..பாராட்டுக்கள் வாசன்..

வைகறை நிலா said...

மெட்டமைத்து எழுதப்பட்ட பாடல்போல் இனிமையாய் இருக்கிறது இந்த கவிதை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் பாராட்டில் நானும் கற்கண்டை கண்ட மழலையாய் ஆகிபோனேன்....

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

மிக்க நன்றி நண்பரே...