எங்களை யாரையும் நீ கண்விழித்து பார்க்கவில்லை... ஆனாலும்! கொவ்வை செவ்விதழ் மெல்ல அகன்றது உன்முகத்தில்... இறைவன் உன்னை பார்க்க நீயவனை பார்த்து புன்முறுவல் தன்னை பூத்தாயென பெரியோர்கள் கூறிட இறைவனே எங்களுக்கு நீயென - உனைபார்த்து ரசித்து மகிழ்கின்றோம்.
மற்ற பருவங்களை அடைந்த பின்புதான் குழந்தை பருவம் இனிமையாக தென்படும்... குழந்தையாகவே இருந்தால் மற்ற பருவங்கள் மீது ஆசை வரதான் செய்யும்... அந்தந்த பருவங்களில் படும் துயர் அந்த பருவத்தை அடைந்தால் தான் தெரியவரும்...
8 comments:
படமும் , கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.
என்னே தெய்வத்தின் படைப்பு!!!! குழந்தையாக இருந்திருக்கலாம் போல வாசன் சார்...
அன்புள்ள கமலேஷ்,
மிக்க நன்றி நண்பரே...
அன்புள்ள புஷ்பா,
நல்லா மகிழ்ச்சியாக தான் இருக்கும்...
மற்ற பருவங்களை அடைந்த பின்புதான் குழந்தை பருவம் இனிமையாக தென்படும்... குழந்தையாகவே இருந்தால் மற்ற பருவங்கள் மீது ஆசை வரதான் செய்யும்... அந்தந்த பருவங்களில் படும் துயர் அந்த பருவத்தை அடைந்தால் தான் தெரியவரும்...
மிக்க நன்றி...
குழந்தையாகவே இருந்திருந்தால்
எம்பூட்டு நல்லாயிருந்திருக்கும்..
ம்ம்ஹூம்...
இப்படி கவிதையெல்லாம் படித்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!
:)
அன்புள்ள அண்ணாமலை,
சரியாக சொன்னீங்க படித்தும் எழுதியும் பார்த்து மகிழ வேண்டியதுதான்...
மிக்க நன்றி...
எங்களுக்குக் கனவிலும் வராத் இறைவன் த்ங்கள் கவிதைக்கு கண் நிறைய வருகிறான்.. வாழ்த்துக்கள்..
அன்புள்ள ஆதிரா,
இவ்வுருவில் கனவாய் போனாலும், எவ்வுருவிலும் இறைவன் தங்களுக்கு காட்சி அருளிப்பான்...
Post a Comment