Thursday, January 14, 2010

வாழ்க உன் பெண்மை...

ந்திக்காமலே என்னை உன்னைப்பற்றி
சிந்திக்க வைத்தாயடி பெண்ணே
ல்யாணம் என்ற ஒற்றைச்சொல்லாலே
லாவகமாய் என்னுயிரை பறித்தாயடி கண்ணே
வாழ்க உன் பெண்மை.

வாழும் வழியை தரவில்லை
வலிக்கும் வேதனையை தந்தாயடி
விழியால் சொல்லவில்லை என்றாலும்
மொழியில்லாமல் மெளனத்தால் கொன்றாயடி
வாழ்க உன் பெண்மை.

வாளால் என்னை கொன்று
கூறாக்கி போட்டு இருந்தாலும்
புதைத்த மண்ணில் புல்லாய்
முளைத்து உயிர் பெற்றிருப்பேன்.

வார்த்தையால் என்னை வதைத்து
எனக்கு நானே கண்ணீர்
வடித்து அழுகின்ற, அழைக்கின்ற
நடைபிணமாக மாற்றி விட்டாயடி
வாழ்க உன் பெண்மை.

2 comments:

Unknown said...

வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களும் நமக்கு பாடமே..... அதை நாம் எவ்வழியில் எடுத்துச்செல்கின்றோமோ அதை பொருத்து தான் அமைகிறது நம் வாழ்கையும்..... இது தங்களின் வாழ்வில் ஒரு அத்தியாயமாய் மட்டுமெ இருக்கட்டும்.. அதுவே வாழ்கையாக நினைத்து விடாதீர்கள்..... உண்மை நிலைகளை அறிய முற்பட்டால் வெற்றி நம் பக்கத்தில்...... வாழ்க!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

ஒவ்வொரு தருணங்களும் நம்வாழ்கையின் பாடங்கள். அதுவே வாழ்கையென்பதுமில்லை சரிதான். பாடங்களை அத்தியாயமாக நினைத்து படித்தவுடன் மறந்து விடகூடாது. அதுவே என்கருத்து.

இவன்,
தஞ்சை.வாசன்