மணநாள்
27-01-10
27-01-10
தென்றலாய் இவன்
இனிமையாய் உனக்கு
என்றென்றும்...
நிலவின் மறுபெயராய்
இந்துமதியாய் இவள்
குளுமையாய் உனக்கு
எப்பொழுதும்...
இனிமையும் குளுமையும்
சேர்ந்து நல்லறம்படைத்திட!
கார்மேகத்துடன் காற்றாய்
இணைந்து மழைப்போல!
நீலவானுடன் நிலவாய்
பிணைந்து இரவைப்போல!
கலந்து இல்லறயமைந்திட!
காதல்மழையில் நனைந்தது
ஆண்டுகள் ஆறு
கல்யாணஉறவில் கைகோர்ந்து
ஆளனும் நூறுகவிதையில் இல்லாதது
வழக்கத்தில் சொல்வது
மரபாய் வளர்ந்தது
வாழையெடிவாழையென வாழ்த்துவது.
அன்பு நெஞ்சம்,
தஞ்சை.வாசன்
2 comments:
இந்துமதி எனும் பெயருக்கு மதுமிதா எனும் பொருளுண்டா?
வாழ்த்து நன்றாக இருந்தது நண்பரே!... தொடர்ந்து எழுந்துங்கள்,
தோழமையுடன், பின்னை இளவழுதி
அன்புள்ள இளவழுதிக்கு,
//இந்துமதி எனும் பெயருக்கு மதுமிதா எனும் பொருளுண்டா?// என்றால் எனக்கு தெரியாது. ஆனால் மதுமிதாவிற்கு, இந்துமதி என்ற செல்லபெயர் (வழக்கத்தில் அழைப்பது) உண்டு. அதனை மனதில்கொண்டு எழுதினேன். அதனை எங்கேயும் சொல்லிடாமல் மறந்தேன். விபரம் அளித்திட உதவிய உனக்கு என் நன்றிகள்.
மேலும் உன்னின் வாழ்த்துகளுக்கும் என்மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவன்,
தஞ்சை.வாசன்
(உன் கல்லூரி தோழனாய்)
Post a Comment