நேற்று பெய்த கனமழையினால்
தோன்றிய காளான் போன்று
உன்பொய்யான வார்த்தை மோகத்தினால்
என்மனதில் விதைத்தேனடி காதலை.
தூரத்திலிருந்து பார்க்கும் நம்கண்களுக்கு
அதன்வெளி வடிவம்மட்டும் காணும்
அருகில் உட்கார்ந்து ஆராயும்போதுதான்
உயிரும்உடலும் அதற்கும் இருப்பதுபுரியும்.
பிரிவென்பதை பற்றி நினைக்காமல்
இருக்கும்வரை எத்தனையோ சுகங்கள்
பிரிதலை கொண்டுவிட்டால் வாழ்கையில்
உயிரேஉடலை உறிஞ்சும் சோகங்கள்.
காளானின் குடைக்குள் ஒளிந்துகொண்டு
மழையை ரசிக்க நினைத்துபோல்
உன்னை மனதில் சுமந்துகொண்டு - வாழ்கையை
வாழவிரும்பியது தவறென்று உணர்ந்தேன்.
3 comments:
காளான்கள் எப்பொழுதுமே பொய் இல்லை என்பதனை நண்பர் முதலில் உண்ர வேண்டும்... நாம் பார்க்கும் பார்வையில் அல்லவா குறை இருக்கிறது.... அதை சரி செய்துவிட்டால்.... ஜெயம் உமக்கே....
அன்புள்ள முரளிக்கு,
உயிரும் உடலும் மற்றும் அழகும் காளான்களுக்கு இருப்பதை நானும் உணர்வேன். அதை என்வரிகளில் நீங்கள் அறியலாம்.
1. நான் சொல்ல வந்தது விதை விதைக்கபடாமலே முளைத்த காளானை போன்று, பார்க்காமல், பழகாமல் என்மனதில் காதல்.
2. மழையில் நனைவதை தவிர்க்க நாய்குடை உதவாததுபோல், அவளது வார்த்தைகள் என்வாழ்வில் என்பதுதான்.
3. காளானை போன்று என்காதலுக்கு வாழ்நாள் அதிகமில்லை என்பது.
நன்றி...
இவன்,
தஞ்சை.வாசன்.
நண்பர் வாசனுக்கு,
தங்களின் வரிகளில் வழியாக நீங்கள் படும் வேதனைகலை உணர முடிகிறது.... எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதை தான் இந்த உலகம் பார்க்கும்.....ஆகையால், நடந்ததை எண்ணி வருந்தாமல்; நடக்க இருப்பதை எண்ணி வாழ்நாளை கடத்தும்படி ஆலோசனை கூறுகின்றேன்....... ஏட்டுச் சுரக்காய் என்றுமே கறிக்கு உதவது என்பது தாங்கள் அறியாத்து ஒன்றும் இல்லை....
Post a Comment