Thursday, January 28, 2010

என் பிராணகாற்றே!!!


காற்றே! என்சுவாச காற்றே !!!
பொதிகைமலையிலிருந்து வீசும் சாரல் காற்றும்!
வடக்கிலிருந்து வீசும் வாடை காற்றும்!
தெற்கிலிருந்து வீசும் தென்றல் காற்றும்!

கோடைக்காலத்தில் வீசும் அதிகாலை காற்றும்!
வசந்தகாலத்தில் வீசும் ஆடி காற்றும்!
மழைகாலத்தில் வீசும் தூறல் காற்றும்!
முன்வாசலில் வீசும் வேப்பமர காற்றும்!
தோட்டத்தில் வீசும் செடிகொடியின் பூங்காற்றும்!
தோப்பில் வீசும் தென்னமர ஓசைகாற்றும்!

ஆற்றங்கரையில் வீசும் ஈரமான காற்றும்!
மயிலிறகு வீசும் இதமான காற்றும்!
இயற்கையாய் வீசும் இன்றைய செயற்கைகாற்றும்!
என்மேனி வருடியும் உணரவில்லையேன் காற்றே?

அவள்மேனிதுணியை கலைத்து தழுவிவந்த காற்றும்!
அவள்கூந்தலை அசைத்து நழுவிவந்த காற்றும்!
அவள்நுரையீரலை அடைந்து உயிர்பெற்றுவந்த காற்றும்!
சற்றே அனலானாலும் என்பிராண காற்றானதாலோ?
என்முகத்தை தீண்டிய கேசத்தால், ஆடைநுனி காற்றால்
என்னையும், மற்றவற்றையும் மறந்தேன் - அதனாலோ?

0 comments: