Thursday, March 4, 2010

இலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...



கோடையில் இலைகளை உதிர்த்து நிற்கும்
மரத்தினை கண்டு சோகங்களை நினைத்து
கண்ணீர் விடும்சமயம் தோள்களை பிடித்து
தோழன் ஒருவனாய் உதிர்க்கும் வரியிது.


துவண்டிருக்கும் தோழா!
மரத்தில் இலைகளுக்கிடையே பூக்கள்
மலர்ந்து பூத்திருப்பதை கண்டிருப்பாய்
எப்பொழுதும் இலைகளே இல்லாமல்
மரமே பூத்திருப்பதை கண்டதுண்டோ
மனதிலும் கண்ணிலும் கண்டிடகூடும்
எத்தனை அழகென்று வர்ணிக்ககூடும்




அதுமட்டுமல்லாது...
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை போல்
உன்மனதில் இருக்கும் சுமைகள் வீழ்ந்துவிடட்டும்
வசந்த காலத்தில் துளிர்க்கும் இலைகளை போல்
உன்இதயத்தில் எண்ணங்கள் தோன்றட்டும்
உன்வாழ்கைக்கு வெற்றியை அள்ளிதரட்டும்.




 உன்னில்...
சோகங்கள் வீழட்டும் தாகங்கள் தீரட்டும்
வாழ்கையில்
காலங்கள் எனும் புள்ளிகள் இணையட்டும்
அழகிய
கோலங்கள் எனும் வாழ்கை பிறக்கட்டும்
புதிதாய்
ராகங்கள் மலரட்டும் சுகங்கள் தொடரட்டும்...

ImageBoo Free Web Hosting 

2 comments:

அண்ணாமலையான் said...

தந்தா சந்தோஷம்தான்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அண்ணாமலையாரே,

கண்டிப்பா தரும் என்று நம்பிக்கைதான்...