எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...
(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)
சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

8 comments:
"இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக..."
நல்ல சிந்தனை, நல்ல கவிதை.
arumai nanbaray...
அருமையான வரிகள்; சிவப்பு க்ண்ணீர் வரவழைத்து விட்டது. மென்மேலும் பல படைப்புகளை எதிர்பார்த்து காத்திருகிறோம்..
நல்ல சிந்தனை - அக்னிபாரதி
அன்புள்ள டாக்டர் அய்யா அவர்களுக்கு,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...
அன்புள்ள ஜெயராமன்,
தங்களின் வருகைக்கும் மற்றும் வரிகளுக்கும் என் நன்றிகள்...
மிக்க மகிழ்ச்சி...
அன்புள்ள முரளி,
வந்த அல்லது வரும் சிகப்பு கண்ணீரை வீணாக்காதீர்கள். தானம் செய்யுங்கள்...
மிக்க நன்றி...
அன்புள்ள பாஸ்கர்,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...
Post a Comment