Monday, March 15, 2010

அரசியல்வாதி...




பாரதி!
இவர்களுக்கு நீ அரசியலை சார்ந்தவனா?
இல்லை எந்த இலட்சியத்திற்காக உழைத்தாய்?
என்றும் தெரியாது உன்னின் கவிதையும்
தெரியாது உந்தன் வரலாறும் தெரியாது...
ஆனால் உன்னுடைய சிறு வரிக்குமட்டும்
உரு கொடுத்தும் கருவை கெடுத்தும்
உயிர் கொடுத்தும் உயிரை எடுத்தும் இவர்கள்.
”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” என்றாயே
அதைதான் இவர்கள் எடுத்துகொண்ட வரிகளடா...
ஆனால், சற்றுமாற்றி உபயோகித்து கொண்டு
”தன்னுடைய உணர்வுகளுக்கு இடையூறுயெனில்
ஜகத்தினை அழித்து வாழ்ந்திடுவோம்” என்று
தனிபட்ட மனிதனின் உடமைகளை சேதபடுத்தியும்
தனிபட்ட மனிதனின் உடலுக்கும் தீ(க்குளிக்க)வைத்தும்
பொதுமக்களை பாதித்தும் நாட்டை அழித்துகொண்டும்.
தன்சுயநலத்தில் மட்டும் அக்கறையை கொண்டு
இன்றும் எங்கள்முன் வாழ்ந்து கொண்டு - அரசியல்வாதியாக.

2 comments:

Anonymous said...

Nalla velai bharathi nee inru ilai... erunthirunthaal intha tharankatta manidarai ninaithu vethanai pattu kondu erupaai

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நண்பா,

ஆமாம்... அவன் இன்றில்லை இருந்திருந்தால் வேதனை பட்டுக்கொண்டு வாழ்ந்திருக்க மாட்டான்... இந்த தரங்கெட்ட மானிட சமூகங்களை பார்த்து..