Saturday, March 20, 2010

நான்... காதல்... சமூகம்...



நண்பன்...
என்னிடம் கேட்ட வினா
சமூகத்தை பற்றியும்
சிறிது சிந்திக்கின்றாயே
கவிதையில் வடிக்கின்றாயே
காதலில் தோற்றதனாலோ?
என்றான்...
என் பதிலையளித்தது பேனா...

ஆமாம்...
நான்
காதலில் தோற்றதனால் மட்டுமல்ல
காதலை சற்று மறந்ததாலும்
ஆனால்
சமூகத்தின் பார்வையென்பது
என்மனதில் இன்று தோன்றியதல்ல...

நான்...
எரிந்த சாம்பலிருந்து பிறக்கும்
பீனிக்ஸ் பறவை போன்று
பிரிந்த காதலின் மடிவிலிருந்தும்
உயிர் பெற்று இன்று....

நான்...
இருகூறாய் பிரித்தாலும் ஈருயிராய்
உயிர் பெரும் மண்புழு போன்று
இதயம் இரண்டாக பிளந்திருந்தாலும்
உயிர் பெற்று இன்று...

நான்...
அணுகுண்டு வீசினாலும் சாகாது
நடமாடும் கரப்பான்பூச்சி போன்று
அவளின் நினைவில் என்றென்றும்
உயிர் பெற்று இன்று...

நம் வாழ்வின் ஓர் அங்கம் காதல்
சமூகத்தின் ஓர் அங்கம் வாழ்வு
என்பதனையும் நினைவிற்கொண்டு...
காதலின் முடிவு
வாழ்வின் முடிவல்ல
என்பதனை உணர்ந்து
நம் வாழ்வு என்பது சமூகத்தின்
பிற நிகழ்வோடுகளும் பிணைத்து
மகிழ்ச்சி அடையும் வழிதன்னை
எண்ணிடுவோம் வாழ்ந்திடுவோம்.

(காதலில் பிரிந்ததால் தான் நான் சமூகத்தை பற்றி சிந்திக்கின்றேன்  என்றில்லாமல்.  எப்பொழுதும் நாம் பிறந்த சமூகத்தை காதலிப்போம், சமுதாயத்தை நிலைநிறுத்துவோம்.)

2 comments:

அன்புடன் மலிக்கா said...

//காதலில் பிரிந்ததால் தான் நான் சமூகத்தை பற்றி சிந்திக்கின்றேன் என்றில்லாமல். எப்பொழுதும் நாம் பிறந்த சமூகத்தை காதலிப்போம், சமுதாயத்தை நிலைநிறுத்துவோம்.)//

அருமையான கருத்து வாசன்..

அருமையான கவிதையும்கூட..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகையிலும் மற்றும் பாராட்டிலும்...