Sunday, March 21, 2010

நகம் சொல்லும் காதல்...



என்னவனின் காதலியே!
அவன் என்னை தினமும்
இன்றும் அழிப்பதும் இழப்பதும்
நான் மீண்டும் வளர்ந்திடுவேன் என்ற
நம்பிக்கையில் மட்டுமில்லையடி பெண்ணே...
உன்னின் பார்வையும் அன்பும்
இன்றாவது அவனுக்கு கிடைத்திடும்
என்ற நம்பிக்கையிலும்தானடி கண்ணே...
அவன் அழிப்பது என்னை மட்டுமில்லையடி...
அவனும் அழிந்து கொண்டு உனக்காக...

4 comments:

க.பாலாசி said...

நல்ல கவிதை... தொடருங்கள்....வாழ்த்துக்கள்...

Aathira mullai said...

வெட்ட வெட்ட வளரும் இயல்பு நகத்துக்கும் காத்ல் அகத்துக்கும் உண்டு என்பதை அழகாக சித்தரித்த வித்தகம் அருமை வாசன். வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

நகத்திற்கும், அகத்திற்கும் உள்ள தொடர்பை இலக்கியத்தின் வாயிலாக கலக்கும்(எடுத்து உரைக்கும்) புத்தகம் நீங்கள்...

வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி. என் நன்றிகள் என்றும்...