Thursday, July 29, 2010

அதிகாலையும்... நானும்....


நேற்றைய இரவுக்குள்
நிலவின் சுடர்
பிரகாசமாய் இருந்திருந்தாலும்
கருப்புமையால் பூசப்பட்ட
ராத்திரிநேர நீலநிற
வானில் சாயங்கள்
கொஞ்ச கொஞ்சமாய்
வெளுக்க தொடங்கியது
அதிகாலை பொழுதும் - மெல்ல
தலைதூக்க தொடங்கியது....


பறவைகள் இரைதேட
உறைவிடம் விட்டு
விரைந்தோட எண்ணம்கொண்டு...
தான் செல்லும்முன்
தன் குஞ்சுகளுக்கு
விடைச்சொல்லி ஒருபுறமும்!
உறவுகளையும் தன்னுடன்
அழைத்து சென்றிட
மறுபுறமும்!! மரங்களின்
கிளைகள் மேலே
அமர்ந்தும் பறந்தும்
குரலின் ஒலியால் - வசியமாக்கும்
இசைபாடி கூடிட...


மெல்லிய காற்றும்
தென்றலாய் வீசிட
துணைக்கு கார்மேகங்களும்
கூட்டமாய் தவழ்ந்திட!
பனியின் சாரலோ?
இல்லை
மழையின் தூறலோ?
என்று
தெரியா வண்ணம்!!
புல்லின்நுனி மீதிருந்த
சிறு பனித்துளியை!
கையில் எடுத்து
வாயால் ஊத....
உளிக்கொண்டு கல்மீது
செதுக்கிட சிதறும்
துகள்களாய்!! நீரும்
சிதறி உருமாறினாலும்...
நீர்க்கனைகளாய் மெய்தனில்
உட்புகுந்து தலைதன்னை
சிலிர்க்க வைக்கும் - குளிராய்
உடலில் போர்த்தொடித்திட...

அச்செயலுக்கு உடலும்தலையும்
அனிச்சைச்செயலாய் தானாகவே
தந்தி அடித்திட...
கைகள் இரண்டும்
உரசி சூடேற்ற!
உதடுகள் இரண்டும்
உதறி தணிக்க !!
என்னையும் மறந்திட்ட - பொழுதினில்
பொழுதும் புலர்ந்தது...


இரவுநேர அலுவலகபணி
இனிதாய் முடித்து
புவனம் செல்ல
பேருந்தில் தூங்கியபடியே
பயணம் செய்தேன்
இயற்கையின் வனப்பை
ரசித்த மகிழ்வில்
இன்று ஏனோ
புதிதாய் கண்டதைப்போல்...
நாழிகையும் ஆறினை
தொடுவதற்கு ஆயுத்தமென
கைபேசியும் சினுங்க
கண்விழித்து பார்த்தேன் -  க(கொ)ண்டது
கனவாய் அல்லாது...

6 comments:

Unknown said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

தோழி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.. வாசன்..

ப. பானுமதி said...

நினைவில் நின்றது...அதிகாலையில் நீயும் நானும் பேருந்து நிலையம்.. பல நினைவலைகளைத் தோற்றுவித்த அழகிய கவிதை..
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..வாசன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதிக்கு,

தங்களுக்கும் என்னின் தாமதமான இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...

மிக்க மகிழ்ச்சி தங்களின் இனிய விருதிற்கு... என்னின் நன்றியும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழிக்கு,

மிக்க நன்றி...

தங்களுக்கும் என்னின் தாமதமான இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பானுமதிக்கு,

நினைவில் என்றும் மறக்க முடியாமல் என்னுள்ளும்... இக்கணமும்...

அதுதான் நேரிலேயெ சொல்லியபிறகும் இங்கும்? பரவாயில்லை..

தங்களுக்கும் என்னின் தாமதமான இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் என்றும் வாழ்நாளில் மறக்க முடியாத நண்பர் தினமாய் எனக்கு... இல்லையில்லை நமக்கு...