Thursday, February 18, 2010

தேன்நிலவு கனவுகள் - 3



 


பெண்ணே! பயணத்தின்
இருக்கையில் உன்னோடு
அருகாமையில் அமர்ந்தும்
என்இடது கரத்தினால்
உனதுகழுத்தை சுற்றிவளைத்தும்
உன்னிருகரங்களின் விரல்களுக்கிடையே
என்கைவிரல்களை பிணைத்தும்
என்தோளினில் உனையள்ளி
சாய்த்தும் உச்சந்தலையினை
முகர்ந்தும் பார்த்திடவேண்டும்...
சன்னல்களின் வழியாக
இயற்கையையும் ரசித்தும்
உன்காதினில் ஏதோரகசியம்
கூறுவதைபோல் கூறியும்
கூறாமலும் மென்மையாய்
காதுமடலினை கடித்திடவேண்டும்
எதிர்பாராத தருணங்களில்
கன்னத்திலும் கழுத்திலும்
என்இதழ்களை சப்தமின்றி
பதித்திடும் நாள் எந்நாளோ?

4 comments:

ஆர்வா said...

ம்ம்ம்ம்ம்ம்.. ரொமப ரசிச்சிருக்கீங்க போல. நான் பயணத்தை சொன்னேன்

Unknown said...

நல்ல ரசனையான எழுத்துக்கள்......

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் கனவு பயணத்தில், அவளோடு சென்ற பயணத்தில் அடைந்த சுகங்களைவிட நீங்கள் இங்கே வந்து வாழ்த்தியிருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைக்கின்றேன்.

கவிதை காதலன், முரளி மற்றும் அ.மலையானுக்கு என் நன்றிகள்...