ஒருவனின் இதயசோலையில் அரும்பானவளே
நீயின்று இடம்மாறி பூத்திருக்கின்றாய்
இளமையேட்டில் காதல்கவியை வடித்தேன்
இமைபோல் அதைநீ காப்பாயென்று
உன்கரத்தில் அள்ளி கொடுத்தேன் - ஆனால்
நீயோ கரையானாக்கி விட்டாய்
அரிக்கப்பட்டது காதல் மட்டுமல்ல
இங்கு நானும்கூட சேர்ந்துதான்.
அன்று நீயென்னை பார்த்து
என்உயிரே என்உறவே என்றெல்லாம்
சொன்ன வார்த்தைகள் யாவும்
சொட்டும் தேனாக இனித்தது - இன்று
கொட்டும் தேளாக மாறிவதைக்கின்றது.
காதல் பாதையில் கடைசிவரை
என்னோடு வருவேன் என்றாயடி
எங்கோ சென்றாய் இன்றுஏனடி?
என்னோடு கல்யாண பாதையில்
காலடி எடுத்து வைக்கவுமில்லை
உன்னுதட்டில் பூத்த வார்த்தையெனும்
பூக்கள் இதற்குள் உதிருந்து
வாடி மாயமாக போகுமென்று
எள்ளளவும் எண்ணவில்லை வாழ்வில்
மணமேடை ஏறாமலே என்னோடு
மனைவியை போல் வாழ்ந்தாய்.
கனவு கற்பனையென்று அவையில்லாமல்
உண்மையென்று உயிரென இருந்தேனடி
மாற்றானுக்கு மனைவியாய் மாலைசூடி
வாழ்வதற்கு என்னோடு நீநடத்தி
பார்த்திட்ட ஒத்திகை நாடகமா?
நீசெய்திட்ட செயல்கள் யாவும் - ஏனோ
நெஞ்சில் நினைவுகளாய் ஊஞ்சலாடுகிறது
என்னுயிரும் எனைபிரியாமல் ஊசலாடுகிறது.
4 comments:
மௌன வலிகள் எல்லாருக்குள்ளும் உண்டு.. அனுபவித்தவருக்கு புரியும்..
அன்புள்ள அ.மலையானுக்கு,
மெளன வலிகள், எத்தனை மென்மையான ஆனால் வலியை சொல்லும் அருமையான வார்த்தை உள்காயத்தை போன்று...
என்றும் நன்றிகள் பல சொல்வேன் தொடரும் உங்கள் ஆதரவுக்கு.
வேதனைகளை வார்த்தைகளாக கோர்த்து கவிதைமாலை சூட்டிவிட்டீர்கள்....
கவிதை இனித்தது இணையதளத்தில்;
காதல் ஏனோ கசந்தது நிஜத்தில்?
அன்புள்ள முரளி,
இனிக்கின்ற வாழ்வே கசக்கும்...
கசக்கின்ற வாழ்வே இனிக்கும்...
Post a Comment