Sunday, February 14, 2010

இதுதான் காதலர் தினமா?


உள்ளத்தில் காதலைகொண்டு சொல்லிட
தயங்கும் ஒருவனின் எண்ணத்தையும்
தைரியத்துடன் வெளிப்படுத்தும் ஒருநாளோ?


இதயத்தில் காதலியைகொண்டு மகிழ்வாய்
இயங்கும் ஒருவனின் செயல்களை
ஆனந்தத்துடன் பகிர்ந்துக்கொள்ளும் திருநாளோ?


வாழ்வில் அவளைகொண்டு பிரிந்து
துடிக்கும் ஒருவனின் நினைவுகளை
சோகத்துடன் அசைபோடும் மற்றொருநாளோ?



மனதில் இச்சைகளைகொண்டு காதலாய்
நடிக்கும் ஒருவனின் சில்மிஷ்ங்களை
கலவரத்துடன் தடைபடுத்தும் கருநாளோ?

காதலை சொல்வதற்கும்
கொண்ட காதலை மகிழ்வதற்கும்
காதலின் அடுத்த நிலையை அடைவதற்கும்
கொள்ளும் காதலையும் அடுத்த நிலைகளையும் தடுப்பதும்
இன்று ஒருநாளா? இந்த காதலர்தினம்.

9 comments:

சாமக்கோடங்கி said...

அந்த கடைசி படம் புரியவே இல்லை..

நன்றாக எழுதி உள்ளீர்..

நன்றி..

மதுரை சரவணன் said...

ellaa kavithaiyum naanarraka ullathu. kataisi patam enakkum puriyavillai. nanru.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரகாஷ் மற்றும் சரவணனுக்கு,

காதலர் தினத்திற்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில் ஒர் அடையாளமாய்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.
(மேலும் இங்கே புகைபடம் மாற்றபட்டுள்ளது)

தஞ்சை-முரளி said...

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்;

வேலையற்றவர்களின் பொழுதுபோக்கு;

வெட்டிப்பெச்சாளர்களின் வியாக்யானம்.....

இதுதான் காதலர்தின கொண்டாட்டம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

பல் இருக்கிறவன் முறுக்கு சாப்பிடுகின்றான். விடுங்க முரளி இதுகெல்லாம் நாம கவலைபடனுமா?

தஞ்சை-முரளி said...

நண்பர் வாசனுக்கு,

முறுக்கு திங்க பல் அவசியம் வேண்டும் என்று நினைப்பில் தான் பலர் வாழ்ந்துகொண்டிருகின்றனர்,

நான் தங்ளை கூறவில்லை ஏன்னென்றால் த்ங்களுக்கு பல் இருகிறது என்பது எனக்கு தெரியும்;

ஆனால் பல் இல்லமலும் திங்க ஆயிரம் வழி உள்ளதை தங்கள் அறிந்து வைதிருப்பிர்கள் என்று நம்புகிறேன்...

கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

முறுக்கை வாயிலிட்டு, பல்லில் கடித்தும் பின் மென்றும் அரைத்தும் திண்கின்ற போதுதான் நற்சுவையை அறிய முடியும்.

இனி பல்லில்லாமல் திண்ணால் சுவையிருக்குமா?

//கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?

கவலை உள்ளவர்களும் கவிதை எழுதுவார்கள். காதலிப்பவர்களும் கவிதை எழுதுவார்கள். இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.

Unknown said...

நன்றி அண்ணா,

சுவை அறிய நாக்கு தேவையே அன்றி பல் தேவை இருக்கது என்பது என் தாழ்மையான கருத்து...

// இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.

தாங்கள் இங்கே கூறியிருப்பது எல்லாமே பெண்களை பற்றியது மட்டுமே.

இருப்பினும் ”காதல் என்பது பெண்களை மட்டும் சாரது” என்பதனை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

நாக்கின் வழியாக மட்டும்தான் சுவையை அறிய முடியும். ஆனால் நாக்கின் வழியேதான் எல்லாவற்றையும் சாப்பிட முடியும். ஆனால் நேரடியாக எல்லாவற்றையும் நாவால் சாப்பிடமுடியாது என்பதும் தங்களுக்கு தெரியாத கருத்தாக இருக்க முடியாது.

எ.கா (கரும்பு, முறுக்கு)

//கவலை உள்ளவர்கள் தான் கவிதை எழுதுவார்களோ?

கவலை உள்ளவர்களும் கவிதை எழுதுவார்கள். காதலிப்பவர்களும் கவிதை எழுதுவார்கள். இங்கே காதலென்பது பெண்களை மட்டும் சாராது.//

இங்கே என்பது என் கவிதையை பற்றி சொல்லவில்லை. பொதுபடையாக கருத்தை உணர்த்த சொல்ல வந்தேன். அதாவது இயற்கையை, தாயை, தோழனை என் பலவற்றை ரசிப்பவர்கள் என கூறவந்தேன். அதை நீங்கள் புரிந்துகொண்டமைக்கு என் நன்றிகள்..