வாழ்கையின் விளிம்பல்ல.
தோட்டத்தின் செடியில்
பூக்கவிருக்கும் அரும்பு.
சாதிக்க பிறந்தவன்(ள்)நீ
சதியால் சரிந்தாய்
விதியென்று முடங்கிவிடாதே
மதியால் வெல்லமுடியும்
வெறுத்து போனாலும்,
பொருத்து போய்விடு...
மறந்து வாழ்ந்திடு...
உயர்ந்து நிலைத்திடு.
தோள்கள் கொடுக்கும்
வாழ்கைக்கு உயிர்
துளிர்க்கும் காலமுண்டு.
உன்னோடு நானாக
துணையாக எக்காலமும்...
6 comments:
அற்புதமான கவிதை , வாசன். அது என்ன ? எங்களுடைய தஞ்சை . நானும் தஞ்சையில் பிறந்தவள் தான் .சிதம்பரத்தில் வாழ்கிறேன். .
அன்புள்ள சகோதரியே/தோழியே,
நீங்களும் தஞ்சையென தெரிந்திருந்தும் நான் செய்த பிழையை பொருத்தருள வேண்டும்.
எங்கள் தஞ்சை அல்ல நம் தஞ்சை.
தஞ்சை கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பது அற்புதமான அனுபவம்தான்..
தொடரட்டும் கவிதைகள்..
அன்புள்ள அன்பின் நாயகனுக்கு,
தஞ்சை கவிஞர்களின் கவிதைகள் மகுடமெனில், அதில் உங்கள் பாராட்டுக்கள் கண் கவரும் முத்துகளாய்.
உப்பு என்றாலும் வைர கற்களாய்...
நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி...
தோள்கள் கொடுக்கும்
உறவுகள் உண்டுஉன்
வாழ்கைக்கு உயிர்
துளிர்க்கும் காலமுண்டு.
உன்னோடு நானாக
துணையாக எக்காலமும்...
ஊக்கமான வரிகள் தன்னபிக்கை தரும் .
தோழரின் வரிகள் நம்பிக்கை மூட்டும் .
அன்புள்ள குடந்தை கவியே,
மிக்க நன்றி தோழரே....
தங்களின் வரவும் மற்றும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சியும் நம்பிக்கையும் எனக்கு தருகிறது...
Post a Comment