காலையில் சூரியகதிர்கள்
மண்ணில் விழுவதற்குமுன்
உடலை பனியும்குளிரும்
வருடிடும் சமயத்தில்
இருவரும் ஒன்றாய்
ஒரே மிதிவண்டியில்
இருபுறமும் பசுமை
சூழ்ந்திருக்கும் பாதையினிலே
பேசிடும் வார்த்தைக்கும்
ஓசைக்கும் இசைக்கும்
சற்றே ஒய்வுகொடுத்து
கண்களின் கைகளின்
ஆசைக்கும் இச்சைக்கும்
அங்கே இடம்கொடுத்து
புதியபாஷைகள் பேசி
உலாவரும் நாள் எந்நாளோ?
8 comments:
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்...
அன்புள்ள கமலேஷ்,
தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
சுகமான இடமா இருக்குதுங்கோ.வணக்கம்.அடிக்கடி வருவோம்மில்ல.
அருமையான வரிகளி ஜொலிக்கிறது தங்களின் கவிதை முத்துச்சரம்..... வாழ்த்துக்கள்..
அழகிய வரிகளில் தவழும் கவிதை..
தஞ்சையின்னா சும்மா. சூப்பர்
வாந்துபோங்க..
அன்புள்ள தாராபுரத்தான் அவர்களே,
தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்...
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதுபோல், தாங்கள் இங்கே உணர்ந்த சுகத்தில் நான் மேலும் சுகமடைக்கின்றேன்.
உங்கள் வரவு அடிக்கடி,அதுவும் தினம் தினம் இருக்கட்டும்.
மீண்டும் என் நன்றிகள்.
இவன்,
தஞ்சை.வாசன்.
அன்புள்ள முரளி,
உங்களின் வாழ்த்துக்கள் என் கவிதைக்கு மேலும் ஜொலிப்பு. எனக்கும்தான்.
என் நன்றிகள்.
இவன்,
தஞ்சை.வாசன்.
அன்புடன் மலிக்கா,
தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்...
//தஞ்சையின்னா சும்மாவா? தாங்களும் தஞ்சை சார்ந்தவர்தானோ?
இவன்,
தஞ்சை.வாசன்.
Post a Comment