உலக அழகியாய் இல்லாமல் போனாலும்
என்னை கவர்ந்த ஒர் உருவமாய்...
ஒன்பது கோள்களில் ஒன்றினைபோல்
உந்தன் முகத்தின் வடிவம்...
செயற்கையாய் வாசம் வீசும் - ஆனால்
புகையைபோல் வளைந்திடாத நேரானகேசம்.
முன்நெற்றியிலிருந்து கண்ணை கடந்து
முன்கழுத்தை தொடும் ஒற்றைகுழல்.
மன்னவனின் கூர்வாளுக்கு இணையாக
அழகுகலையால் செய்யப்பட்ட வில்புருவம்.
திரைசீலையாய் கண்ணாடி இருந்தும்
எனைஈர்க்கும் திறன்வாய்ந்த கண்கள்.
அணில்கடித்திடாத பெரிய நாவல்பழம்போல்
கண்களுக்கு கீழே கன்னங்கள்.
பூனையின் உரோமம் போன்று
உதட்டின்மேலே ஒன்றிரண்டாய் மீசை.
மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைபோல்
எனைகவரும் சாயம்பூசிய உதடுகள்.
முகபரப்பில் உதட்டுக்கு மேலேகீழே
அழகையூட்டும் மூன்று மச்சங்கள்.
மோனலிசா ஓவியம் போன்று
புகைபடங்களில் உந்தன் முகதோற்றம்.
என்கையளவுக்கு இதயத்தை போலே
தாமரைகுருத்தாய் உந்தன் மார்புகள்.
ஆடையின் செறிவில் சிங்காரமாய்
பின்னழகில் ஆடும் புட்டங்கள்.
ஜீன்ஸ் உடையில் ஒய்யாரமாய்
கண்ணழகில் படும் மெல்லிடை.
தைராய்டு சுரப்பியின் குறை
உந்தன் மேனியின் எடை.
சரீரத்தை பார்த்து வியக்காமலே
சாரீரத்தில் மட்டும் மயங்கினேன்.
இவை அனைத்தையும் ரசிக்க
இவனுக்கு வாய்ப்பில்லாமல் போனதேன்...
2 comments:
நன்றாகத்தான் வர்ணித்துள்ளீர்கள்.
இறுதியாக நீங்கள் கூறிய உவமையும் கருத்தும் சற்று நெருடலாக இருந்தாலும் நன்றாக உள்ளது. விடுங்க நண்பா நமக்குன்னு ஒருத்தங்க வருவாங்க
அன்புள்ள இளவழுதி,
தங்களின் பாராட்டுக்கு என் மனம்மகிழ்ந்த நன்றிகள்.
நம்மை அவள் அடையாமல் போனது அவளின் துரதிஷ்டம். மிகையாக நினைக்க வேண்டாம்.
நம் அன்பை பரிமாறிக்கொள்ள கண்டிப்பாக ஒர்ஜீவன் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம்மோடு ஒர்நாள் கலந்திடும் என்ற தங்களை போன்றவர்களின் நம்பிகையோடு என்றும்...
Post a Comment