உன்னை என்கண்மணி என்று
நான் அழைத்தமைக்கு காரணம்
கேட்டாயே என்னவென்று அன்று
இதோ சொல்லுக்கின்றேன் இன்று
நாம் பிறந்தது முதல்
நாம் இறக்கும் வரை
உருவத்தில் எந்த மாற்றம்
அடையாமல் நம் உடலில்
இயங்கும் ஒர் உறுப்பு
இதுவென்று தெரியுமா உனக்கு
அதுதானடி கண்ணின் மணியடி
அதுபோல் எனக்கு நீயடி
என் கண்மணியே!
உன்மீது நான் வைத்திருக்கும்
என்அன்பு என்றும் நிலைத்திருக்கும்!
உன்னை பார்த்தநாள் முதல்
நான் இறக்கும்நாள் வரை!
எக்கணமும் மாறாமல் வீற்றிருக்கும்
உனக்காக இக்கணமும் பூத்திருக்கும்...
7 comments:
நல்லா விளக்கமா சொல்லிட்டீங்க... எதாவது பரிசு கிடச்சுதா?
அண்ணாமலையாரே! தரிசாய் கிடக்கும் இந்த மனதிற்கு பரிசாய் உங்கள் எழுத்துக்களின் ஆதரவு.
இதுபோல் என்றும் கிடைத்திட்டால் அதுவே பெரிசு...
நன்றிகள் பல...
'கண்மணி'..!
எத்தனை
அழகான வார்த்தை..
அதற்கேற்ற
அழகான கவிதை..
வாழ்த்துக்கள்..
கவிதை அற்புதமாக இருக்கிறது...
என் கண்ணுக்கு மணிபோல...
நீல வானுக்கு நிலா...
என் வலைக்குள் ஓர்உலா...
என்னை வாழ்த்தியது வைகறைநிலா..
நன்றிகள், தங்களின் வருகையை, எண்ணங்களை நோக்கி...
வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
பதில் கூட கவிதைபோல் அழகாக எழுதியிருக்கிறீர்களே.?
உங்கள் வலைப்பூவின் கவிதைகள் எல்லா இனிய இதயங்களிலும் இடம்பிடிக்க வாழ்த்துக்கள்.
முருகானந்தன் ஐயா அவர்களுக்கு,
நன்றி.தங்களின் பாரட்டுக்கு என் தலை வணங்குகின்றேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் வரவு மேலும் மகிழ்ச்சியை தந்தது.
Post a Comment