Tuesday, February 9, 2010

என் தஞ்சையும் காதலியும்...

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி
விளையாடிடும் பசுமை தரணிபோல!
புன்னகையும் பொன்நகையும் கூடி
மின்னும் மங்கையைடி நீயெனக்கு.
 
பல்வேறு பூக்களின் கோர்வைசரமாய்
ஊரை மயக்கிடும் கதம்பம்போல!
உடல்பாகங்களின் தொகுப்பின் செறிவில்
வியக்க வைக்கும் அழகொனக்கு.

வர்ணங்களும் கற்களும் கலந்து
நெஞ்சை இழுக்கும் ஒவியம்போல!
தினம் நீயுடுத்தும் ஆடையினால்
நிறங்களும் காட்டிடுமே மேனியழகு.

உடைந்த வண்ணகண்ணாடி துண்டுகளால்
கண்ணை பறிக்கும் தட்டைபோல!
நெற்றியில் வண்ணவடிவ பொட்டும்
கண்ணின் கருமையும் ஈர்க்கும் முகமடி.

என்றும்கேட்டாலும் பார்த்தாலும் அழுக்காத
மேளகச்சேரியும் நாட்டுபுற கலைகளைபோல!
வைத்தகண்ணும் வாங்காமல் பார்க்கும்
கேட்கும் உந்தன்வரவும் குரலும்.

பெரியகோவில் கோபுர உயரம்போல!
என்மனதில் உதித்திடும் எண்ணங்கள்
தலையாட்டி பொம்மைபோல! - உன்நினைவால்
என்றும் ஆடும் எந்தன்இதயம்.

காதலென்று வந்தாலே எத்தனையோ ரகசியம்
அதனை கூறுவதற்கு இடம் பஞ்சம்....
தஞ்சையென்று சொன்னாலே எவ்வளவோ விசயம்
நான் சொல்லியது இங்கே கொஞ்சம்...



4 comments:

அண்ணாமலையான் said...

காதல் ரசம் சொட்டுது... நடக்கட்டும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அ.மலையானுக்கு,

தங்களின் ரசனைக்கு என் நன்றிகள்...

ஆர்வா said...

ம்ம்ம்ம்.. புரியுது.. தொடரட்டும் தொடரட்டும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பு க.காதலா,

புரிந்தது, என் தஞ்சையின் அழகா? அல்ல என் காதலா?