Wednesday, February 24, 2010

தூக்கம்...

எனையேனடி இப்படி
தழுவ வருகின்றாய்
நான் வேண்டாமென்றும்
பணிபுரியும் நேரமென்றும்
இடமென்றும் கூறியும்
என்னிரு கண்களையும்
கலங்க செய்தாயடி.
உனைதடுக்க கண்களை
திறந்தே வைத்திருந்தேன்
நிமிடத்திற்கு பலமுறைகள்
கண்களை சிமிட்டினேன்.
அப்படியிருந்தும் எப்படியோ
என்னை அறியாமலே
என்னுள் புகுந்தாயடி.
சாமியின் அருள்போல்
உடலுக்குள் புகுந்து
தலையாட்ட வைத்தாய்.
உன்னிடமிருந்து விடைபெற
முகத்தினை கழுவினேன்
தேனீரும் அருந்தினேன் - ஆயினும்
எனைபிரிய மனமில்லாமல் நீ...

உன்னை எப்படியாவது
தழுவிட வந்தேனடி.
நான் படுக்கைக்கு
வந்ததுமே நீயென்னை
அடைந்து மெய்மறந்திட
செய்திடுவாய் என்று
உள்ளுக்குள் நினைத்தேன்.
வரமால் போனதேனோ?
உன்னை அழைக்கவும்
இறுக்க அணைக்கவும்
செயல்களை சிலசெய்தேன்.
மெல்லிசையும் கேட்டேன்
மஞ்சத்தில் புரண்டு
புரண்டும் படுத்தேன்
கண்களை மூடியே
திறக்காமல் தவமிருந்தேன்.
நீயென்னை தழுவிய
வேளைதனில் நான்
உன்னை வெறுத்ததனாலோ
என்மீது கோபம்
கொண்டாயோ? வரமறுக்கிறாயோ? - எப்படியும்
மனம்மாறி வருவாயென நான்...

9 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Successful people do not relax in chairs...They relax in their works...(Bill Gates)

அண்ணாமலையான் said...

எனக்கும் அப்டித்தான்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எனக்கும் அப்படிதானு சொன்ன, ஆபிஸ்ல தூங்கிற பழக்கம் உங்களுக்கும் உண்டோ?

தஞ்சை-முரளி said...

நான் நல்லா ஓய்வு எடுப்பேன்..... அலுவலகம், வீடு என்றில்லை.....

தஞ்சை-முரளி said...
This comment has been removed by the author.
தஞ்சை-முரளி said...

ஓய்வு எடுக்க எதுக்கு நேரம் ஒதுக்கனும்; எப்பொ எப்போ ஓய்வு தேவையோ அப்போ எடுத்தாபோச்சு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

கேட்க நல்லாதான் இருக்கு...

தஞ்சை-முரளி said...

நல்லா இருகறத மட்டும் கேட்டா நல்லாதான் இருக்கும் அண்ணா... :)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

நன்றும் தீதும் கலந்தது தானே வாழ்வு.

ஒன்றை கேட்டதின் பின் தெளிதல் தானே நன்றும், தீதும்.