Saturday, February 27, 2010

சரணம் இல்லை மரணம்...



உன்னை காண
நான் வருகின்றேன்...

ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...

இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...

இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்... 


ImageBoo Free Web Hosting


                                                                                               

6 comments:

அண்ணாமலையான் said...

ரொம்ப முத்திப்போச்சா?(காதல்)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதல் வந்தாலே வாழ்கையில் முத்(க்)தி போய்விடுகிறது...

தஞ்சை-முரளி said...

என்ன பண்ணறது; எல்லாம் கலிகாலம்.........

Aathira mullai said...

அன்பு வாசன், காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச மாட்டார்கள் என்பது உண்மையே
கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள். உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆதிரா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் வருகைக்கும் மற்றும் உள்ளத்தின் எண்ணத்தை பிரதிபலிதித்த கருத்திற்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்...

மேலும் உங்கள் எண்ணத்தையும், கருத்தையும் எதிர்நோக்கி...

இவன்,
தஞ்சை.வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

காலம் கலிகாலம் ஆகிபோச்சு...

காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல்...