Sunday, February 28, 2010

சபிக்கின்றேன்...

 
இன்று...
உன் பெயரைமட்டும் ஜெபித்த
என் உதட்டாலே சபிக்கின்றேன்
உன்னை...
என்னவென்றால் வளமோடு வாழ
என் மனதாலும் சபிக்கின்றேன்...
ImageBoo Free Web Hosting

7 comments:

அன்புடன் மலிக்கா said...

வாசன். சபிப்பதிலும் புதுமையா? நல்லதுதான். மனதார நினைத்தவர்களை சபிக்கவும் தோன்றுமோ..

மிக அழகு..

தஞ்சை-முரளி said...

எனக்கும் தங்களை சபிக்கத்தோன்றுகிறது வாழ்க வளமுடன் என்று......

Aathira mullai said...

நல் வாழ்வுக்கு சபிக்கிற காதல் மனம் பழமை. தங்கள் கவி மணம் புதுமை.இது நவீனம் வாழ்த்துக்கள் வாசன்
அன்புடன்
ஆதிரா

Aathira mullai said...

நல் வாழ்வுக்கு சபிக்கிற காதல் மனம் பழமை. தங்கள் கவி மணம் புதுமை. இது நவீனம். வாழ்த்துக்கள் வாசன்
அன்புடன்
ஆதிரா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

காதலித்தவளை மணந்து தன்னோடு மட்டும் நலத்தோடு வாழ விரும்புவது சுயநலம் கலந்த அன்பாகிறது.

தன்னுடன் காதலி எப்படி வாழவேண்டும் என்ற மனதின் எண்ணங்கள் மற்றும் நினைவுகள், அவள் யாருடைய கைபிடித்து (இருந்தாலும்) வாழ்ந்தாலும் தான் நினைத்ததுபோல் மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற பாங்கும், பாசமும் என்னை உங்கள் முன் வாழ்த்த வைக்கின்றது.

என் நன்றிகள் என்றும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

உங்களின் சபித்தல் தினம் என்னை சேர வேண்டுக்கின்றேன் இன்முகத்துடன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் ஆதிரா,

காதலுக்கு வருவதில்லை முதுமை
நீங்கள் வாழ்த்தியிருப்பது அருமை
எனக்கு சேர்க்கின்றது பெருமை
நன்றி சொல்லவேண்டியது என்கடமை.