இறைவா!
எறும்புகளும் நாளை
உண்டுவாழ்ந்திட
இருக்கும்சமயத்தில் இன்றே
உணவை சேமித்து வைக்கின்றன…
ஒட்டகங்களும் நாளை
தாகம்தனித்திட
கிடைக்கும்சமயத்தில் இன்றே
நீரை குடித்து வாழ்கின்றன…
கூடிமகிழ்ந்திட
பழகும்சமயத்தில் இன்றே
கூடுகட்டி வாழ துவங்குகின்றன…
மனிதா!
நம்மைவிட அறிவுகுறைந்த உயிரினங்களே
நாளையென்று சிந்திக்கும் இந்தசமயம்
நாம்யேன் இன்றாவது சிந்திக்ககூடாது?
நல்லதென்று இந்தாண்டாவது தொடரகூடாதா?நேற்று என்பது
தரையில் வாடி கிடக்கும் மலர்கள்
அவை வாடியது ஏனென்று
எண்ணுவதும் அர்த்தமற்றது
செடியில் பூக்க இருக்கும் மொட்டுகள்
அவை எப்படி இருக்குமென்ற
கனவும் வாசமற்றது
இன்று என்பது
கையில் மலர்ந்து சிரிக்கும் இதழ்கள்
அவைகளை போல்வாழ வேண்டுமென்ற
நினைவு தன்நிகரற்றது.
நண்பா!
வெற்றியை சூடுவோமென்ற உறுதியோடு
இலட்சியங்களை நாம் வகுப்போம்.
நமக்கு மட்டுமென்ற
தனியுடைமை மனதில் கொள்ளாது
பிறர்க்கும் வேண்டுமென்ற உன்னதத்தோடு
பொதுயுடைமை என்றும் காப்போம்.
நாளை வெற்றிகனியாகிட
இன்றே விதைத்து மகிழ்வோம்
தினமும் அதுவளரும் வளர்ச்சியை
ரசிப்போம் நாமும் வளர்வோம்.
நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்இக்கணமே செய்வோம்
எக்கணமும் செய்வோம்.
3 comments:
அன்புள்ள ரமேஸ்க்கு,
Planning is bringing the future into the present so that you can do something about it now - Alan Lakein
உங்கள் விமர்சனத்தை நோக்கி...
நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்
இக்கணமே செய்வோம்
எக்கணமும் செய்வோம்
ரொம்ப அருமையான அழகான வரிகள் மாப்ல
அன்புள்ள சபீர்,
மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு...
Post a Comment