Tuesday, February 2, 2010

மின்சாரம் என் காதலி...



மின்சார கம்பிகளைகூட
கையாலே பிடிக்கின்றேன்
ஏனோ! தெரியவில்லை
எனக்கொன்றும் ஆகவில்லை.
எதனால் என்று
நானும் யோசித்தேன்
உன்னை நினைத்துநினைத்து
மறத்துபோனது என்நெஞ்சம்!
அதனால் என்னவோ
என்னுடலும் மரக்கட்டையானதோ?

7 comments:

Anbinnayagan said...

உங்களை மறந்து தவறுதலாக மின்சாரத்தை நிஜமாக தொட்டுவிடாதீர்கள்.
தஞ்சையில் பிறந்தவர்களுக்கு அழகாக கவிதை எழுத வருகிறதே.. (தஞ்சை மக்களுக்கு) கடவுள் கொடுத்த வரமா.?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பின் நாயகனுக்கு,

தொட்டதின் பலனாக கூட இருக்கலாம். இனி அதற்காக மீண்டும் தொடமாட்டேன். உங்களின் அன்பான அறிவுரைக்கு செவி சாய்ப்பேன்.

தஞ்சையில் பிறந்தவர்களுக்கு அழகாக கவிதை எழுத வருகிறதே.. (தஞ்சை மக்களுக்கு) கடவுள் கொடுத்த வரமா.?
நீங்கள் கூறுவது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் காதல், இறைவன் நம் அனைவருக்கும் அளித்த வரம் என்பது மறுக்க முடியாதயொன்று.

நன்றிகள் பல உங்களின் இன்றைய வருகைக்கும், நாளைய வருகைக்கும்...

Anbinnayagan said...

'கடவுள் கொடுத்த வரம்'.. சரியாக எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் கூடவே சில கஷ்டங்களையும் கொடுத்து விடுகிறாரே..?

Anbinnayagan said...

submit ur blog in saram.vaarppu.com.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பின் நாயகனுக்கு,

கஷ்டங்கள் இருந்தால் தானே வாழ்வில் சந்தோஷங்களை உணரமுடியும்.

சுகத்தில் வலி இருப்பதும், வலியில் சுகம் இருப்பதும் நம்வாழ்கையில் கலந்திட்ட ஒன்றாயிற்றே...

நானும் என்னுடைய வலையை வார்ப்புகளுடன் இணைத்துக்கொண்டேன்.

தங்களின் ஆலோசனைக்கும் உதவிக்கும் என் நன்றிகள் என்றும்...

Unknown said...

கவிதை அருவி கொட்டுகிறதே உங்கள் வலைப்பூவில்...?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

அதிக வேலைபளுவுக்கு இடையில் தங்களின் வருகையே மிகுந்த மகிழ்ச்சி.