Wednesday, December 23, 2009

என்னுயிரே நீ...

வான்
மேகத்திலிருந்து தூவும் தூறலும்
தெற்கிலிருந்து வீசும் தென்றலும் பொழிய
மோகம் கொடுக்கும் சாரலாய் - அல்லாதுயென்
தேகத்தில்  தோற்றுவிக்கும் கீறலாய் உருவெடுத்தது.


தினம்
என்மனம் படும் குமுறலும்
என்உதட்டில் எழும் உளறலும் ஒழிய
என்இதயம் தேடும் உன்குர(லை)லாய் – பெண்ணே
என்சோகத்தை போக்கும் தோன்றலாய் வந்துவிடு.


கணம்
உன்மொழி கேட்காமல் கதறினேன்
உன்னை பார்க்காமல் பதறினேன் வாழிய
உன்பசும் நினைவால் ஆதரவா(ய்)னேன் - கண்ணே
உன்மெளனத்தை சொல்லாமல் சிதறலாய் சொல்லிவிடு


என்
கண்ணில் கண்ணீரும் வற்றியது
கண்ணீரும் கவிதை இயற்றியது அழியா
கவிதையும் காலத்தால் உயிரா(ய்)யிற்று - நில்லாதுயென்
காதலாய் கலந்துவாழ்ந்திட ஆற்றலாய் ஒன்றுகூடிவிடு.

2 comments:

S.M.சபீர் said...

உங்கள் வைர வரிகளில் உள்ள சோகம் புரிகின்றது நண்பா.பொருத்திருந்து பார் வெற்றி நிச்சயம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

சோகத்தினை புரிந்து என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...

பொருத்திருப்போம்... காலம் மாறும்...