Friday, December 11, 2009

சுனாமியின் வேதனை


 
கடற்கரையில்
காலடி வைக்கும்
சிறுமியின் ஏக்கம்
சுனாமியின் தாக்கம் இது ...


ஏய் சமுத்திரமே !!!

அன்று சத்தமில்லாமல்
அமைதியான தூக்கத்தில் அசுரனாய்வந்து
அன்பான என்இனங்களை அழித்தவனே !
வாழ்கையை அபகரித்து அனாதையாக்கியவனே !!

நாங்களே
வறுமையில் வாடுபவர்கள் !
எங்களிடம்
இருந்ததையும் எங்களையும்
வாரீரைத்தும் எடுத்தும்
சென்றாயே !! நியாயமா ?


இன்று வெட்கமில்லாமல்
அலையெனும் தூதுவனை அனுப்பி !
என்காலெனும் பாதங்களை கோடிமுறை  
வருடிவருடி பாவமன்னிப்பு கேட்க்கின்றாயே !!

உன்னை
வாழ்கையில் மறக்கமுடியுமா !
எங்களை
இனிஉன்னால் காக்கமுடியுமா !!
கொடுத்ததைவிட அதிகம் - எடுத்தும்
கொண்டாயே !!! நியாயமா ?

என்றும் இனிமேல்
வரமாட்டேன் என்று சொன்னால்
நான் மட்டுமில்லை இறந்தவர்களும்
உன்னை மன்னித்துவிடுவர் !
மீண்டும்வருவதற்கு இது ஒத்திகை
என்று(ம்) சொல்லிவிடாதே - தாளாது என்நெஞ்சம் !!



நான்
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.

2 comments:

Sooriyan said...

நல்ல கருத்துகள் நிறைந்த பாடல்.
உங்களுடைய Blog இன் புது வடிவம் அழகு.மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூரியனுக்கு,

என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்...