Thursday, December 24, 2009

யாதும் ஊரே யாவரும் கேளீரோ?

(வேற்று மாநிலகாரர்களாக பிறந்தது நம் தவறுமில்லை, அது தோன்றிய / தோற்றிவித்த காதலின் தவறுமில்லை).


என்றும்
நமக்காகவும்
நம் காதலுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
முனைவதற்கும் ஆயத்தமாய்.


ஆனால்
தமிழுக்காகவும்
என் தமிழனுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
முனைவதற்கும் ஆயத்தமாய்.


அதற்காக
உன்னையும்
உன் காதலையும்
துறப்பேன், வேண்டுமானாலும்
இறப்பேன், மாறமாட்டேன் - என்றும்
இருப்பேன் தமிழனாய் மட்டும்.


அன்பான
என் தாய்மொழி மீது
எனக்கு பைத்தியம்தான்
ஆனாலும்
என்றும் பிறமொழி மீது
எனக்கு வாஞ்சைதான்.


இன்றுவரை
தமிழ்மொழி என்ற வெறியோ
பிறமொழி என்று தரகுறைவோ
எந்தசமயுமும்
இதயத்தில் இருந்ததும் இல்லை
இதயத்தை இடறியதும் இல்லை.


உணர்ந்தேன்
உன் வார்த்தைகளால் என்னுள்ளம்
ஊனமாக்கபட்டதை
முடிந்தால் சம்மதம் பெற்றுவா
நீ வாழ்வது தமிழ்நாடு
இனி வாழபோவது தமிழனோடு என்று.


காத்திருப்பேன்
கண்ணே உன்வருகைக்காக
பூத்திருப்பேன்
பெண்ணே உன்பார்வைக்காக
மயங்கி(மாய்ந்து)போவேன்
மானே உன்அன்புக்காக.

8 comments:

Unknown said...

இந்தப் புனிதக்காதலை புனிதப்படுத்த சம்மதம் பெற்று வருவாளா என்று.... காதலிக்காக காதிருக்கிறதோ காதலனின் மாசற்ற காதல் மணம்...... வாழ்த்துக்கள்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காதல் வீசிடும் எங்கும் மணம்
காக்க வைப்பது காதல் குணம்
இங்கு ஏங்கிருப்பது காதலன் மனம் - அவளுக்காக
இவன் காத்திருப்பான் அனுதினம்.

Sooriyan said...

இது என்னவோ சொந்த அனுபவம் போலிருக்கிறதே ??? ஸ்ரீனி என்ன விஷயம் ரகசிய காதலா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆம்.ஆனால் போலியான அனுபவம்.
விஷத்தை குடித்துவிட்டு நடிக்க முடியாது வாழ்வதைபோல். காதலில் விழுந்துவிட்டு மறைக்க முடியாது விழாததுபோல் என்பது உண்மையோ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் எனில். அவனின் துயரம் என்னையும் சேராதோ? இங்கு நான் அவனாக, அவன் நானாக.

Unknown said...

ஆரம்பத்தில் அனைவரும் நண்பர்களாகத்தான் இருப்பர்கள், மனது ஒத்துப்போகும் காதலாக மாறும் வரையில்...

S.M.சபீர் said...

அசத்தல் மாப்பு
என்க்காக எதை இழக்க தயார் மாப்ல

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

தமிழனுக்காக எதையும் இழக்க தயார்.